Home /News /employment /

NBCC-ல் வேலைவாய்ப்பு: ஜூனியர் இன்ஜினியர் மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

NBCC-ல் வேலைவாய்ப்பு: ஜூனியர் இன்ஜினியர் மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

காட்சி படம்

காட்சி படம்

என்பிசிசி இந்தியா லிமிடெட் ஆனது, ஜூனியர் இன்ஜினியர் பதவிகள் மற்றும் துணை பொது மேலாளர் பதவி ஆகிய 81 காலியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

என்பிசிசி (NBCC) இந்தியா லிமிடெட் (National Buildings Construction Corporation) ஆனது, ஜூனியர் இன்ஜினியர் பதவிகள் மற்றும் துணை பொது மேலாளர் (இன்ஜினியரிங்) பதவி ஆகிய 81 காலியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. குறிப்பிட்ட பணிகளுக்கான விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஆக ஏப்ரல் 14-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.nbccindia.in என்ற என்பிசிசி-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

என்னென்ன பணிகளுக்கு எத்தனை காலி இடங்கள் உள்ளன? எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது? விண்ணப்ப கட்டணம் உண்டா? அதில் இருந்து ஏதேனும் விலக்கு உண்டா? என்பிசிசி-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? போன்ற கேள்விகளுக்கான விடைகளை அறிய தொடர்ந்து படிக்கவும்.

என்பிசிசி இந்தியா லிமிடெட்-இல் உள்ள காலியிடங்கள் பற்றிய விவரங்கள்:

என்பிசிசி அறிவித்துள்ள இந்த வேலைவாய்ப்புகளின் கீழ் மொத்தம் 81 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதில் 60 காலியிடங்கள் ஜூனியர் இன்ஜினியர் சிவில் பதவிக்கும், 20 காலியிடங்கள் ஜூனியர் இன்ஜினியர் எலக்ட்ரிக்கல் பதவிக்கும், 1 காலியிடம் துணை பொது மேலாளர் இன்ஜினியர் (சிவில்) பதவிக்குமானது.

என்பிசிசி அறிவித்துள்ள காலியிடங்களுக்கான வயது வரம்பு பற்றிய விவரங்கள்:

ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கான விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 28 ஆகும் மற்றும் துணை பொது மேலாளர் இன்ஜினியர் (சிவில்) பதவிக்கான விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 46 க்குள் இருக்க வேண்டும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நிறுவனத்தால் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் கூடுதல் விவரங்களைப் பார்க்கலாம்.

என்பிசிசி காலியிடங்களுக்கான விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகும். எஸ்சி, எஸ்டி, பிடபுள்யூடி & டிபார்ட்மென்டலை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட வேலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி இணைப்பை அணுக இங்கே கிளிக் செய்யவும். (https://www.nbccindia.in/webEnglish/jobs)

என்பிசிசி அறிவித்துள்ள காலியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி?

- குறிப்பிட்ட வேலைகளுக்கு விண்ணப்பிக்க முதலில் என்பிசிசி இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.nbccindia.in க்குள் நீங்கள் செல்ல வேண்டும்.

- என்பிசிசி அதிகாரப்பூர்வ வெப்சைட்டின் ஹோம் பேஜில், 'ஹுமன் ரிசோர்ஸ்' (Human Recourse)' என்கிற டேப்-ஐ நீங்கள் காண்பீர்கள், அதை கிளிக் செய்யவும்.

also read : ஜிப்மர் வேலைவாய்ப்பு 2022 - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இதோ..

- அதை கிளிக் செய்த பின்னர், 'கேரியர்' (Career) என்கிற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

- இப்போது ரிஜிஸ்டர் செய்து பின் கேட்கப்படும் அல்லது தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.

- பின்னர் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்

- பிறகு கோரப்படும் / தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கவும்

- பின் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தவும்.

- எல்லாம் செய்து முடித்ததும், பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.

மேலதிக விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் என்பிசிசி வெளியிட்ட 6 பக்க அறிவிப்பை படித்து பார்க்கவும்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Job Vacancy

அடுத்த செய்தி