Job Vacancy: தமிழ்நாடு குழந்தைகள் நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. ஒப்பந்த அடிப்படையில் வேலை-விண்ணப்பிக்க முழு விவரம்

வேலைவாய்ப்பு

திறமையானவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 17.07.2021 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

  • Share this:
    தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள்‌ நலக்குழுவில்‌ காலியாக உள்ள உதவியாளர்‌ மற்றும்‌ கணினி இயக்குபவர்‌ பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது.

    காலிபணியிடங்கள்:

    உதவியாளர்‌ மற்றும்‌ கணினி இயக்குபவர்‌ பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது.

    கல்வித்தகுதி: 

    • 12-ம்‌ வகுப்பு, இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

    • இளநிலை பட்டப்படிப்பு பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌.

    • அரசு அங்கீகாரம்‌ பெற்ற நிறுவனத்தில்‌ கணினி கல்வியில்‌ பட்டயப்பயிற்சி பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.

    • தமிழ்‌ மற்றும்‌ ஆங்கில தட்டச்சில்‌ முதுநிலை தேர்ச்சி பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.

    • கணிணி இயக்குவதில்‌ அனுபவம்‌ பெற்றிருக்க வேண்டும்‌.


    ஊதிய விவரம்: 

    ரூ.9000 வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

     வயது வரம்பு;

    விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க கூடாது.























    நிறுவனம் கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள்‌ நலக்குழு
    பணியின் பெயர் உதவியாளர்‌ மற்றும்‌ கணினி இயக்குபவர்‌
    பணியிடங்கள் பல்வேறு
    கடைசி தேதி 17.07.2021
    விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

    விண்ணப்பிக்கும் முறை:

    திறமையானவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 17.07.2021 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

    முகவரி: 

    மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌,
    மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு,
    இணைப்பு கட்டிடடம்‌, 3-வது தளம்‌,
    மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌, 11.
    நாகர்கோவில்‌ – 629 001.

    அறிவிக்கை: OFFICIAL NOTIFICATION 
    Published by:Tamilmalar Natarajan
    First published: