Home /News /employment /

இந்திய அஞ்சல் வங்கியில் வேலைவாய்ப்பு: 650 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிக்க முழு விவரம்

இந்திய அஞ்சல் வங்கியில் வேலைவாய்ப்பு: 650 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிக்க முழு விவரம்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

IPPB Job Vacancy : இந்திய அஞ்சல் பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிவுள்ளது.

India Post Payments Bank Limited (IPPB) - இந்திய அஞ்சல் பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனத்தில் எக்ஸிகியூடிவ் அதிகாரி பணியில் 650 இடங்கள் காலியாக உள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்ப நடைமுறைகள் மே 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பணி ஆர்வலர்கள் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி மே 20ஆம் தேதி ஆகும்.

இந்தப் பணிகளுக்கு ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பம் செய்யலாம். அதற்கு https://www.ippbonline.com/ என்ற இணைய முகவரியில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்த 7 முதல் 10 தினங்களுக்குள் விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்படும். பணிகளுக்கான தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

IPPB ஜிடிஎஸ் பணி நியமன காலிப்பணியிட விவரங்கள்: எக்ஸிகியூடிவ் பணி நிலையில் காலியாக உள்ள 650 இடங்களை நிரப்புவதற்கு இந்த நியமன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

IPPB ஜிடிஎஸ் பணி நியமன வயது தகுதி: இந்திய அஞ்சல் பேமெண்ட்ஸ் வங்கியின் எக்ஸிகியூடிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 25 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி நிலவரப்படி உங்களது வயது கணக்கீடு செய்யப்படும்.

IPPB ஜிடிஎஸ் பணிக்கான விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும்.

also read : TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

IPPB ஜிடிஎஸ் பணிக்கான கல்வித் தகுதி: இந்திய அரசு அல்லது இந்திய அரசின் ஒழுங்குமுறை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனம் அல்லது கல்வி வாரியம் ஒன்றில் விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். பணிகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கான நேரடி லிங்க் இங்கு உள்ளது. https://ibpsonline.ibps.in/ippbgdsapr22/

விண்ணப்பம் செய்வது எப்படி ?

  • இந்திய அஞ்சல் பேமெண்ட்ஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்.

  • ஹோம் பேஜ் பக்கத்தில் உள்ள கேரியர் டேப் மீது கிளிக் செய்யவும்.

  • விளம்பரத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மீது கிளிக் செய்ய வேண்டும்.

  • ரெஜிஸ்டர் என்ற ஆப்சன் தேர்வு செய்து, பதிவு செய்து கொள்ள வேண்டும்.

  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்

  • இப்போது விண்ணப்பக் கட்டணம் செலுத்தவும்.

  • விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும். எதிர்கால பயன்பாடு கருதி அதை உங்கள் டிவைஸில் டவுன்லோடு செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  • காலிப்பணியிடம் மற்றும் விண்ணப்ப நடைமுறை குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள, இந்திய அஞ்சல் பேமெண்ட்ஸ் வங்கியின் அறிவிக்கையை படித்து தெரிந்து கொள்ளலாம். அறிவிக்கையை படிக்க இங்கே கிளிக் செய்யவும் /https://ippbonline.com/documents/31498/132994/1652106270547.pdf.


 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Job, Job vacancies

அடுத்த செய்தி