Home /News /employment /

JOB : வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.?

JOB : வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.?

வருமான வரித்துறை

வருமான வரித்துறை

வருமான வரித் துறையில் எம்டிஎஸ் மற்றும் இதர பணிகளுக்கு, சாதனை புரிந்த விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அந்தத் துறை அறிவித்துள்ளது.

வருமான வரித்துறையில் எம்டிஎஸ் மற்றும் இதர பணிகளுக்கு, சாதனை புரிந்த விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அந்தத் துறை அறிவித்துள்ளது. ஆர்வமுள்ள நபர்கள், வருமான வரித் துறையின் www.incometaxindia.gov.in என்ற தளத்திற்கு சென்று நோட்டிஃபிகேஷன் பார்த்துக் கொள்ளலாம்.

அங்கு வரையறை செய்யப்பட்ட அதே முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இதுகுறித்து, வருமான வரித் துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “ஆர்வம் உள்ள மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள், அனெக்சூர் - 2 இல் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம். விண்ணப்ப படிவத்தில் 18.04.2022 தேதிக்கு முன்னதாக அல்லது அன்றைய தினம் 6 மணிக்குள் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வருமான வரித்துறை கூடுதல் ஆணையர், தலைமையகம் (பணியாளர் மற்றும் விரிவாக்கம்), பி1 தளம், அறை எண் : 14, ஆயக்கர் பவன், பி -7, சௌரிங்கே ஸ்கொயர், கொல்கத்தா - 700069 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிட விவரங்கள்:

இந்த நியமன நடவடிக்கை என்பது தற்போது 24 வகையான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக மேற்கொள்ளப்படுகிறது. இதில், 18 காலிப்பணியிடங்கள் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் என்ற பணிக்கான. டேக்ஸ் அசிஸ்டெண்ட் பிரிவில் 5 பணியிடங்களும், வருமான வரி ஆய்வாளர் பணியிடத்தில் ஒரு இடமும் காலியாக உள்ளன.

also read : SBI வேலைவாய்ப்பு 2022: பிஓ, கிளார்க் பணிகளுக்கான காலியிடங்கள் எப்போது அறிவிக்கப்படும்?
 வயது வரம்பு:

அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பம் செய்வதற்கான குறைந்தபட்ச வயது தகுதி 18 ஆகும். அதிகபட்ச வயது தகுதி என்பது ஆய்வாளர் பணிக்கு 30, டேக்ஸ் அசிஸ்டெண்ட் பணிக்கு 27 மற்றும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் பணிக்கு 25 ஆகும்.

விண்ணப்பம் செய்வது எப்படி.?

விருப்பம் உள்ள நபர்கள், வருமான வரித் துறை இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்கள் அடிப்படையில் பூர்த்தி செய்ய வேண்டும். அந்த விண்ணப்பங்களை, குறித்த காலெக்கெடுவுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அதற்கான முகவரி, வருமான வரித்துறை கூடுதல் ஆணையர், தலைமையகம் (பணியாளர் மற்றும் விரிவாக்கம்), பி1 தளம், அறை எண் : 14, ஆயக்கர் பவன், பி -7, சௌரிங்கே ஸ்கொயர், கொல்கத்தா - 700069 என்பதாகும்.

also read : TNPSC குரூப் 2, 2ஏ பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு 11 லட்சம் பேர் விண்ணப்பம்!

கல்வித் தகுதி மற்றும் ஊதிய விவரம்:

எம்டிஎஸ் பணிக்கான கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு ஆகும். இதற்கான ஊதியம் ரூ.5,200 முதல் ரூ.20,200 ஆகும்.

வருமான வரித் துறை ஆய்வாளர் பணிக்கு கல்வித் தகுதி என்பது ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

டேக்ஸ் அசிஸ்டெண்ட் பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மணிக்கு 8,000 கீ பிரெஸ் அடிப்படையில் டேடா எண்ட்ரீ செய்ய வேண்டும்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Income tax, Job vacancies

அடுத்த செய்தி