Home /News /employment /

ரூ.18,536 தொகுப்பூதியம்... மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு

ரூ.18,536 தொகுப்பூதியம்... மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு

விண்ணப்பம் https://ariyalur.nic.in என்ற மாவட்ட இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ariyalur, India
    மாதம் ரூ.18,536/- தொகுப்பூதியம் 1 வருட கால ஒப்பந்தத்திற்கு 40 வயதிற்குட்பட்ட அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் வாட்சாலயா (Mission Vatsalya) வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு இயங்கி வரும், அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு ஆற்றுப்படுத்துநர் (Counsellor) தற்காலிக பணியிடத்தினை ஒப்பந்த அடிப்படையில் ஒரு பதவிக்கு மாதம் ரூ.18,536/- தொகுப்பூதியம் 1 வருட கால ஒப்பந்தத்திற்கு 40 வயதிற்குட்பட்ட அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி / முதுநிலை பட்டதாரிகள் (10+12+3 Pattern) (உளவியல், சமூகவியல், சமூகப்பணி, பொது சுகாதாரம், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல்) படிப்பு முடித்தவர்களாக இருத்தல் வேண்டும். அல்லது முதுநிலை பட்டயப்படிப்பு (PG Diploma in Counseling and Communication) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    மேலும் குழந்தைகள் சார்ந்த ஆற்றுப்படுத்துதல் பணியில் ஆண்டுகள் (தொண்டு 1 நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குழந்தைகள் இல்லங்கள்) முன் அனுபவம் பெற்றிருக்க கூடிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பம் https://ariyalur.nic.in என்ற மாவட்ட இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 16.09.202அன்று மாலை 05.00மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூர் - 621 704. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி