Home /News /employment /

RBI Grade B ஆஃபிஸர் பணியிடங்களுக்கான அறிவுப்பு: இன்று முதல் துவங்கும் ரிஜிஸ்ட்ரேஷன்..

RBI Grade B ஆஃபிஸர் பணியிடங்களுக்கான அறிவுப்பு: இன்று முதல் துவங்கும் ரிஜிஸ்ட்ரேஷன்..

ஆர்பிஐ

ஆர்பிஐ

இந்திய ரிசர்வ் வங்கியானது ஆர்பிஐ கிரேடு பி அதிகாரி (RBI Grade B officer) பணியிடங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

2022-ஆம் ஆண்டு RBI கிரேடு பி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு ரிஜிஸ்ட்ரேஷன்களை வரும் மார்ச் 28, 2022 முதல் இந்திய ரிசர்வ் வங்கி ஓபன் செய்ய உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான rbi.org.in-க்கு விசிட் செய்வதன் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். RBI கிரேடு B ஆட்சேர்ப்பு 2022-க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ RBI வெப்சைட்டில் கிடைக்கும்.

RBI Grade B officer பணியிடங்களுக்கான ரிஜிஸ்ட்ரேஷன் ப்ராசஸ் மார்ச் 28, 2022 முதல் தொடங்கி ஏப்ரல் 18 அன்று முடிவடைகிறது. RBI கிரேடு B ஆட்சேர்ப்பு பற்றிய விவரங்கள் மற்றும் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த எழுத்துத் தேர்வு மே 28 முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை நடைபெறும்.

ரிஜிஸ்ட்ரேஷன் ஓபன் ஆகும் நாள்: மார்ச் 28, 2022

ரிஜிஸ்ட்ரேஷன் க்ளோஸ் ஆகும் நாள்: ஏப்ரல் 18, 2022

RBI கிரேடு B பொது அதிகாரி தேர்வு (பேப்பர்-I) நடக்கும் நாள்: மே 28, 2022

RBI கிரேடு B பொது அதிகாரி தேர்வு (பேப்பர்-II) நடக்கும் நாள்: ஜூன் 25, 2022

RBI கிரேடு B அதிகாரி DEPR & DSIM தேர்வு (பேப்பர்-I) நடக்கும் நாள்: ஜூலை 2, 2022

RBI கிரேடு B அதிகாரி DEPR & DSIM தேர்வு (பேப்பர்-II) நடக்கும் நாள்: ஆகஸ்ட் 6, 2022

விண்ணப்பதாரர்கள் வரும் ஏப்ரல் 18, 2022 வரை விண்ணப்பிக்கலாம். RBI கிரேடு B ஆட்சேர்ப்பு 2022-ன் கீழ் மொத்தம் 294 காலியிடங்கள் உள்ளன.

காலியிடங்களின் விவரம்:

அதிகாரிகள் கிரேடு ‘பி’(DR)- General - 238 பணியிடங்கள்
அதிகாரிகள் கிரேடு ‘பி’(DR)- DEPR - 31 பணியிடங்கள்
அதிகாரிகள் கிரேடு 'பி'(DR)- DSIM - 25 பணியிடங்கள் என மொத்தம் 294 காலி பணியிடங்கள் உள்ளன.

also read : வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.?

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு மற்றும் தேவையான கல்வித் தகுதிகள் போன்ற தகுதி வரம்புகளை விண்ணப்பிக்கும் போது தவறாமல் பூர்த்தி செய்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் தாங்கள் 21 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். அரசு நிர்ணயித்த விதிமுறைகளின்படி, இடஒதுக்கீடு செய்யப்பட்ட பிரிவினருக்கு (reserved categories) வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.

RBI Grade B ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்கள் (SC/ST/PwBD போன்ற ரிசர்வ்டு கேட்டக்ரியை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 50%) அல்லது இளங்கலைப் பட்டப்படிப்பில் அதற்கு சமமான கிரேடு மற்றும் 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளில் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / போர்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Job vacancies

அடுத்த செய்தி