Home /News /employment /

அரியலூர் : தூய்மைப் பணியாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் - விரைவில் விண்ணப்பிக்கவும்

அரியலூர் : தூய்மைப் பணியாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் - விரைவில் விண்ணப்பிக்கவும்

தூய்மைப் பணியாளர் பணி

தூய்மைப் பணியாளர் பணி

Job vacancy : விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.09.2022 பிற்பகல் 5.00 மணிக்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள 10 பகுதி நேர துப்புரவாளர் (ஆண்) (GT Non- Priority - 4, MBC/DNC Non Priority- 1, MBC/DNC Priority- 1, BC Non- Priority - 2, SC Non- Priority - 1 SCA Non- Priority-1) 1 பகுதி நேர துப்புரவாளர் (பெண்) (BC Non- Priority - 1) மாதம் ரூ.3000/- என்ற தொகுப்பூதியத்தில் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

    மேற்படி காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலம் இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

    வயதுவரம்பு : 















    01.07.2022 தேதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
    பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
    இதர பிரிவினருக்கு18 முதல் 30 வயதிற்குமிகாமல் இருக்க வேண்டும்.

    அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

    மேற்படி தகுதிகளுடன் அரியலூர் மாவட்டத்திலுள்ள விடுதிகளில் பகுதி நேர துப்புரவாளராக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்தில் மாதிரி விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்தும், உரிய சான்றுகளின் நகல் இணைத்தும், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒட்டி அதனை அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகம் முகவரியில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.09.2022 பிற்பகல் 5.00 மணிக்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    ALSO READ | ஆசிரியர் வேலை தேடுறீங்களா? வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு - முழுவிவரம்
     காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் மீது அரசு பரிசீலிக்காது எனவும் மனுதாரரே முழுப்பொறுப்பு எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மனுதாரர்களை மேற்கண்ட தகுதியின் அடிப்படையில் விண்ணப்பம் செய்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி