தமிழகத்தில் செயல்படும் துணை சுகாதார நிலையம், நலவாழ்வு மையங்களில் (HWC- HSCs) ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. பணி: இடைநிலை சுகாதார பணியாளர் (Mid level Healthcare Provider)
காலிப்பணியிடங்கள் : 4848
வயது வரம்பு: 50 வயது வரை
தகுதி: செவிலியர் பட்டம் (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing)
2 . பணி : பல்நோக்கு சுகாதார பணியாளர் / Health Inspector Grade II (ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும்)
காலிப்பணியிடங்கள் : 2448
வயது வரம்பு: 50 வயது வரை
தகுதி:
இரண்டு வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) சுகாதார ஆய்வாளர் துப்புரவு ஆய்வாளர் ( அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள், காந்திகிராம் கிராமிய நிறுவனம் உள்ளிட்ட நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் இயக்குனர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையால் வழங்கப்பட்ட சான்றிதழ்)
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்ப படிவங்கள், மாவட்ட வாரியாக காலியிடங்கள் விபரம் தேசிய நலவாழ்வு குழுமம் https://nhm.tn.gov.in/ வலைதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்தில் 15.12.2021 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு தேசிய நலவாழ்வு குழுமத்தின் வலைதளமான ( https://nhm.tn.gov.in/ மூலம் தெரிந்துக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட மாவட்ட நலவாழ்வு சங்கம் அலுவலக வேலை நாட்களில் நேரில் சென்று அறிந்துக்கொள்ளலாம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment, Employment news, Government jobs, Health, Recruitment