முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / சென்னை பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியர் வேலை - உடனே விண்ணப்பிக்கவும்

சென்னை பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியர் வேலை - உடனே விண்ணப்பிக்கவும்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் துறையில் 61 பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் உதவிப்பேராசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

  • Last Updated :

சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் உதவிப்பேராசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். தேர்வு செய்யப்படுவோர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் துறையில் 120 நாள்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படுவர். விருப்பமும் தகுதியும் உடையவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணபிக்கலாம்.

பணி: உதவிப்பேராசிரியர்

காலிப்பணியிடங்கள்: 61

தகுதி: NET / SLET / SET அல்லது Ph.D., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: 30,000

Also Read: Job Alert | ஸ்டேட் பேங்கில் டிகிரி படித்தவர்களுக்கு அதிகாரி வேலை - உடனே விண்ணப்பியுங்கள்

S.NO SubjectNo. of. posts
1Economics03
2History03
3Commerce03
4Computer science03
5Mathematics03
6Psychology03
7English03
8Management Studies03
9Political Science02
10Public Administration02
11Music03
12Geography03
13Cyber forensics02
14Sociology03
15Sanskrit02
16Saiva Siddhantha02
17Journalism & Mass communication / Visual communication03
18Christian Studies02
19Human Rights & Duties02
20Criminology02
21Tamil03
22French02
23Anthropology02
24Education02
61

Also Read:  திருச்சி NIT-யில் இஞ்சினியரிங் படித்தவர்களுக்கு வேலை - உடனே விண்ணப்பிக்கவும்

விண்ணப்பிக்கும் முறை: www.unom.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Appointments பகுதியில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஜனவரி 5-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளின் படி நேர்காணல் நடத்தி விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05-01-2022

top videos

    மேலும் விவரங்களுக்கு: https://www.unom.ac.in/webportal/uploads/appointments/Notification_Assistant%20Professor_IDE%20(2)_20211216094412_27859.pdf இந்த லிங்கில் சென்று தெரிந்துக்கொள்ளவும்.

    First published:

    Tags: Assistant Professor, Employment news, Job, Job Vacancy, Madras University