பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் வேலை வாய்ப்பு: 325 பணியிடங்கள்!

இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 165 இடங்களும், ஓ.பி.சி பிரிவினருக்கு 84 இடங்களும் எஸ்.சி பிரிவினருக்கு 51 இடங்களும், எஸ்.டி பிரிவினருக்கு 25 இடங்களும் உள்ளன.

news18
Updated: February 18, 2019, 5:19 PM IST
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் வேலை வாய்ப்பு: 325 பணியிடங்கள்!
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
news18
Updated: February 18, 2019, 5:19 PM IST
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 325 அதிகாரிகளுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி, தற்போது இந்த வங்கியில் சீனியர் மேனஜர், மேனஜர் அன்ட் ஆபிசர் போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 325 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 165 இடங்களும், ஓ.பி.சி பிரிவினருக்கு 84 இடங்களும் எஸ்.சி பிரிவினருக்கு 51 இடங்களும், எஸ்.டி பிரிவினருக்கு 25 இடங்களும் உள்ளன.

கிரெடிட் பிரிவில் முதுநிலை மேலாளர் பணிக்கு 51 பேரும், மேலாளர் பணிக்கு 26 பேரும், சட்டப் பிரிவில் முதுநிலை மேலாளர் பணிக்கு 55 பேரும் மேலாளர் பணிக்கு 55 பேரும், எச்.ஆர்.டி மேலாளர் பணிக்கு 18 பேரும், ஆபிசர் பணிக்கு 120 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.


ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. ஆபீசர் பணிக்கு 21 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற பணிகளில் அதிகபட்சம் 37 வயதுடையவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

சி.ஏ, ஐ.சி.டபுள்யு, எம்.பி.ஏ மற்றும் முதுநிலை படிப்புகளுடன் குறிப்பிட்ட முதுநிலை டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், சட்டம் பட்டப்படிப்பு படித்தவர்கள், பி.இ., பி.டெக், எம்.சி.ஏ படித்தவர்கள் ஆகியோருக்கு பணிவாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். அந்தந்தப் பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம்.

பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினர் 600 ரூபாய் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 100 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதுமானது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். 2.3.2019-ம் தேதித்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான ஆன்லைன் தேர்வு மார்ச் 24-ம் தேதி நடத்தப்படவுள்ளது.

Loading...

இந்தப் பணிக்கு www.pnbindia.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கவேண்டும்.

Also see:

First published: February 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...