இஸ்ரோவில் பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு!

விண்வெளி குறித்த ஆய்வு மற்றும் ஏவுகனைகளை ஏவுதல் உள்ளிட்ட பணிகளைத் இந்த ஆய்வு மையம் தீவிரமாக செய்துவருகிறது.

news18
Updated: February 18, 2019, 6:53 PM IST
இஸ்ரோவில் பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு!
இஸ்ரோ
news18
Updated: February 18, 2019, 6:53 PM IST
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர் மற்றும் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவருகிறது. விண்வெளி குறித்த ஆய்வு மற்றும் செயற்கைக்கோள்களை ஏவுதல் உள்ளிட்ட பணிகளை இந்த ஆய்வு மையம் தீவிரமாக செய்துவருகிறது.

தற்போது, இஸ்ரோவில் காலியாக உள்ள ஆராய்ச்சியாளர், பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.


துறை சார்ந்த படிப்பில் முதல் வகுப்பில் எம்.இ, எம்.டெக்கில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். அல்லது கேட் தகுதி பெற்று டிசைன் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
மாதச் சம்பளமாக ரூ 56,100 - 1,77,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

www.sac.gov.in அல்லது https://recruitment.sac.gov.in இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி மாதம் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

Loading...

Also see:

First published: February 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...