சென்னை மாநகராட்சியில் மாவட்ட சுகாதார சங்கம் – திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ்வரும் 89 பதவிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் 11 மாதம் ஒப்பந்த மற்றும் தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் நிரப்படுகிறது.
1.பணியின் பெயர்: மருத்துவ அலுவலர் – DTC
காலி பணியிடங்கள் : 02 ( SC-1 , BC-1)
ஊதியம்
: ரூ.45000
அத்தியாவசிய தகுதி : இந்திய மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவர்கள்.தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்
2.பணியில் பெயர்: மருத்துவ அலுவலர் (Medical College)
காலி பணியிடங்கள் : 03 (BC-1, MBC-1, SC(A) -1 )
ஊதியம்: ரூ.45000
அத்தியாவசிய தகுதி : இந்திய மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவர்கள்.தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்
3.பணியின் பெயர் : மருத்துவ அலுவலர் DRTB Centre
காலி பணியிடங்கள் : 01 SC(A) -1
ஊதியம்: ரூ.45000
அத்தியாவசிய தகுதி : இந்திய மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவர்கள்.தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்
4.பணியின் பெயர்: மாவட்ட DPC திட்ட ஒருங்கிணைப்பாளர்
காலி பணியிடங்கள்: 02 ( GT -1 , BC -1)
ஊதியம் – ரூ.20000
தகுதி: எம்.பி.ஏ மற்றும் சுகாதார நிர்வாகவியல் பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்து குறைந்தபட்சம் ஒரு வருடம் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
5.பணியின் பெயர்: மாவட்ட DRTB/ HIV TB ஒருங்கிணைப்பாளர்
காலி பணியிடங்கள் : 01 ( MBC-1)
ஊதியம் : ரூ.19000
அத்தியாவசிய தகுதி : அறிவியல் பட்டப்படிப்பு, 2 மாத கணினி சான்றிதழ் (MS Office), நிரந்தர இரண்டு சக்கர ஓட்டுநர் உரிமம்
6.பணியின் பெயர்: மாவட்ட PPM ஒருங்கிணைப்பாளர்
காலி பணியிடங்கள் : 03 ( GT-1, BC-1, SC-1)
ஊதியம் : ரூ.19000
அத்தியாவசிய தகுதி : MSW/ MSC – உளவியல், தொடர்பு துறையில் ஒரு வருட களப் பணி அனுபவம் ( ACSM/ பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு/ சுகாதார திட்டம்), நிரந்தர இரண்டு சக்கர ஓட்டுநர் உரிமம்பணியின் பெயர்: முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் ( STS)
7. பணியின் பெயர்: முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் ( STS)
காலி பணியிடங்கள் : 03 ( GT -1, MBC-1, SC-1)
ஊதியம்: ரூ.15000
அத்தியாவசிய தகுதி : 10, ப்ளஸ் டூ தேர்ச்சி மற்றும் அறிவியல் பிரிவில் இளநிலை பட்டம், குறைந்தபட்சம் சுகாதார துறையில் ஒரு வருட பணி அனுபவம், நிரந்தர இரண்டு சக்கர ஓட்டுநர் உரிமம், 2 மாத கணினி சான்றிதழ் (MS Office)
8. பணியின் பெயர்: முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் ( STLS)
காலி பணியிடங்கள் : 02 ( MBC- 1, SC(A) -1)
ஊதியம்: ரூ.15000
அத்தியாவசிய தகுதி : 10வது, ப்ளஸ் டூ தேர்ச்சி மற்றும் அறிவியல் பிரிவில் இளநிலைப்பட்டம், மருத்துவ கல்வி இயக்குநகரம் அங்கிகரிக்கப்பட்ட மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப பட்டயம், நிரந்தர இரண்டு சக்கர ஓட்டுநர் உரிமம், 2 மாத கணினி சான்றிதழ் (MS Office), குறைந்தப்பட்சம் சுகாதார துறையின் ஒரு வருட பணி அனுபவம்
9. பணியின் பெயர்: மருந்தாளுனர்
காலி பணியிடங்கள்: 03 (GT-1. SC(A)-1, MBC-1)
ஊதியம்: ரூ.15000
அத்தியாவசிய தகுதி : பி.பார்ம், டி பார்ம் (B.Pharm / D.Pharm), அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை மருந்து கிடங்கு அல்லது சுகாதார மையத்தில் ஒரு வருட பணி அனுபவம்
1
0.பணியின் பெயர்: ஆய்வக தொழில் நுட்ப வல்லுனர்
காலி பணியிடங்கள் : 58 ( GT-18, BC-16, MBC, 12, BC(M) – 2, SC-8, SC (A)- 2)
ஊதியம் : ரூ.10000
அத்தியாவசிய தகுதி : அறிவியல் பாடத்துடன் ப்ளஸ் டூ தேர்ச்சி, மருத்துவ கல்வி இயக்குநகரம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப பட்டயம். 2 மாத கணினி சான்றிதழ் (MS Office)
11.பணியின் பெயர்: TB சுகாதாரப் பார்வையாளர்
காலி பணியிடங்கள்: 05 ( GT-1, BC-2, MBC-1, BC(M) -1)
ஊதியம்: 10000
அத்தியாவசிய தகுதி : அறிவியல் பிரிவில் இளநிலைப்பட்டம் (அல்லது) அறிவியல் பிரிவில் ப்ளஸ் டூ தேர்ச்சி (அல்லது) சுகாதாரப்பணியாளராக பணியாற்றிய அனுபவம், 2 மாத கணினி சான்றிதழ் (MS Office) பெற்றிருக்க வேண்டும்
12.பணியின் பெயர்: கணினி இயக்குபவர்
காலி பணியிடங்கள் : 01 (SC -01)
ஊதியம் : ரூ.10000
அத்தியாவசிய தகுதி : 10வது, ப்ளஸ் 2, அரசு அங்கீகரிகப்பட்ட கணினி பட்டம். தமிழ்(ம) ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்தில் 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் ஆற்றல், MSWord, Excell
13.பணியின் பெயர்: ஆற்றுபடுத்துனர் - DRTB மையம்
காலி பணியிடங்கள்: 04 (GT-2, BC,1, SC-1)
ஊதியம்: ரூ.10000
அத்தியாவசிய தகுதி :சமூகப்பணி, சமூகவியல் உளவியல் பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
14.பணியின் பெயர்: கணக்காய்வாளர்
காலி பணியிடங்கள் : 01 (SC-01)
ஊதியம்: ரூ,10000
அத்தியாவசிய தகுதி : வணிகவியல் பிரிவில் இளநிலைப்பட்டம், இரண்டு ஆண்டு இரட்டைப்பதிவு அனுபவம், கணக்கியல் மென் பொருளியலில் இரண்டு வருட பணி அனுபவம்
விண்ணப்பிக்கு முறை: பெருநகர சென்னை மாநகராட்சி வலைதளத்தில் இருக்கும் விண்ணப்ப மாதிரி படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப்பணியிடங்கள் 11 மாதம் ஒப்பந்த மற்றும் தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் நிரப்பப்படும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : திட்ட அலுவலர் – திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் (NTEP), மாவட்ட காசநோய் மையம், 26, புளியந்தோப்பு, நெடுஞ்சாலை, புளியந்தோப்பு, சென்னை -600012
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 29.11.2021 மாலை 05.00 மணிக்குள்
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர், நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம் தபால் மூலமாக தெரிவிக்கப்படும். சென்னை மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வதும் நிராகரிக்கப்படுவதும் NTEPயின் அதிகாரத்திற்கு உட்பட்டது. மேலும் விவரங்களுக்கு
www.chennaicorporation.gov.in என்ற லிங்கில் சென்று தெரிந்துக்கொள்ளவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.