Home /News /employment /

கோவை மக்களே ரூ.40,000 சம்பளத்தில் உங்கள் ஊரில் காத்திருக்கும் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

கோவை மக்களே ரூ.40,000 சம்பளத்தில் உங்கள் ஊரில் காத்திருக்கும் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் இதோ

    கோவை மாவட்ட  பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை ,மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் உள்ள துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், துணை இயக்குநர் குடும்ப நலத்துறை, இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலகங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி  வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    1.பணி: District Quality Consultant For Coimbatore for Coimbatore District

    காலிப்பணியிடங்கள் : 01

    தகுதி: விண்ணப்பதாரர்கள், அரசு / அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி முடித்தவராக இருப்பது அவசியம். பணிக்கு தேவையான முன் அனுபவம் குறித்த தகவலுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.

    சம்பளம்: ரூ. 40,000 ஆயிரம்

    வயது வரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்

    2.பணி: IT- Coordinator (LIMS) for Coimbatore District

    காலிப்பணியிடங்கள் : 01

    தகுதி: MCA/ BE/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் இருத்தல் வேண்டும்

    சம்பளம்: ரூ.21000

    வயது வரம்பு: 23- 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

    3.பணி: Block Account Assistant, Anaimalai Block

    காலிப்பணியிடங்கள்: 01

    தகுதி: B.COM கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். Tally முடித்திருக்க வேண்டும்

    சம்பளம்: 12000

    வயது வரம்பு : 23- 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

    4.பணி: Labour Mobile Medical unit Driver

    காலிப்பணியிடங்கள்: 01

    தகுதி: கனரக வாகனம் ஓட்டுவதற்காக ஓட்டுநர் உரிமம் (Heavy license) வைத்திருக்க வேண்டும். 2 வருட முன் அனுபவம் இருக்க வேண்டும்

    சம்பளம்: 9000

    வயது வரம்பு: 20- 35வயதிற்குள் இருக்க வேண்டும்

    5.பணி: Labour mobile medical unit attender cum cleaner

    காலிப்பணியிடங்கள்: 01

    தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி

    சம்பளம் : 6500

    வயதுவரம்பு: 20 -35 வயதிற்குள் இருக்க வேண்டும்

    தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

    விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை அருகில் உள்ள மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலத்தில் பெற்றுக்கொள்ளலாம்.  கோவை மாவட்ட இணையதள முகவரி  https://coimbatore.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

     மின்னஞ்சல் முகவரி (E-mail ID) : nhmcbe2016@gmail.com

    கடைசி தேதி: 16.12.2021

    விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

    உறுப்பினர் செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்

    மாவட்ட நல்வாழ்வு சங்கம்( District Health Society)

    துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,

    219, ரேஸ் கோர்ஸ் ரோடு,

    கோயம்புத்தூர் – 641018

    குறிப்பு: விண்ணப்பங்களை நேரிலோ/ விரைவு தபால் / மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Coimbatore, Employment, Employment news, Job search, Job vacancies, Job Vacancy, Recruitment

    அடுத்த செய்தி