பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு!

இதில் ஸ்டெனோகிராபர் பணிக்கு 13 இடங்களும் அப்பர் டிவிஷன் கிளார்க் பணிக்கு 47 இடங்களும் உள்ளன.

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு!
பாபா அணு ஆராய்ச்சி மையம்
  • News18
  • Last Updated: February 18, 2019, 4:13 PM IST
  • Share this:
பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் அப்பர் டிவிஷன் கிளார்க், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட வேலைகளுக்கு 60 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் செயல்பட்டுவருகிறது. அணு ஆற்றல் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வது இந்த ஆய்வு மையத்தின் முக்கியப் பணியாக இருந்துவருகிறது.

தற்போது, இந்த ஆராய்ச்சி மையத்தில் அப்பர் டிவிஷன் கிளார்க், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 60 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் ஸ்டெனோகிராபர் பணிக்கு 13 இடங்களும் அப்பர் டிவிஷன் கிளார்க் பணிக்கு 47 இடங்களும் உள்ளன.


பட்டப்படிப்பை 50 சதவித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் அப்பர் டிவிஷன் கிளார்க் பணிக்கும், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்துக்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் குறிப்பெடுக்கத் தெரிந்தவர்கள் ஸ்டெனோகிராபர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும். அரசு விதிகளின்படி, வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கவேண்டும். பிப்ரவரி 25-ந் தேதி இணையதள வாயிலாக விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இதுகுறித்த விவரங்களுக்கு http://www.barc.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

Also see:
First published: February 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading