திருச்சியில் மத்திய அரசு வேலை வாய்ப்பு அறிவிப்பு ... 

திருச்சியில் மத்திய அரசு வேலை வாய்ப்பு அறிவிப்பு ... 

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம்

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Young Professional – I பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 • Share this:
  தேசிய வாழை ஆராய்ச்சி மைய காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. M.Sc. (Biotechnology / Bioinformatics) துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  தேசிய வாழை ஆராய்ச்சி மைய காலிப்பணியிடங்கள்:

  Young Professional – I பதவிக்கு திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

  வயது வரம்பு:

  Young Professional பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விதிகளின் படி பதவிக்கு வயது தளர்வு பொருந்தும்.

  கல்வி தகுதி:

  தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் M.Sc. (Biotechnology / Bioinformatics) முடித்திருக்க வேண்டும்.

  மாத ஊதியம்:

  Young Professional – I – ரூ.25,000

  தேர்வு செயல் முறை:

  தேவையான தகுதிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணல் நடைபெறும் தேதி பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

  விண்ணப்பிக்கும் முறை:
  தகுதியான ஆர்வமுள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை கல்வித் தகுதி / அனுபவ சான்றிதழ்கள் போன்றவற்றின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் 22.03.2021 க்குள் nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். http://nrcb.res.in/ இந்த இணையத்தளத்திலும் வேலைவாய்ப்பு அறிவிப்பை தெரிந்துக்கொள்ளலாம்.

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: