ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழ்நாட்டு மீன்வளத்துறையில் வேலை...டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!

தமிழ்நாட்டு மீன்வளத்துறையில் வேலை...டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!

தமிழ்நாட்டு மீன்வளத்துறையில் வேலை

தமிழ்நாட்டு மீன்வளத்துறையில் வேலை

தமிழ்நாடு மீன்வளத்துறையில் காலியிடங்களை நிரப்புவதற்குத் தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாடு மீன்வளத்துறையில் ஆய்வாளர் பிரிவில் காலியாக உள்ள 88 இடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வு முறைகள் என்ன, எப்படி விண்ணப்பிப்பது என்பதை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

  தமிழ்நாடு மீன்வளத்துறை பணிக்கான விவரங்கள்:

  காலியாகவுள்ள இடங்கள்: மீன்வளத்துறை ஆய்வாளர் பிரிவில் 64, துணை ஆய்வாளர் பிரிவில் 24 என மொத்தம் 88 இடங்கள் உள்ளன.

  பணிக்கான கல்வித் தகுதி:

  ஆய்வாளர் பணிக்கு மீன்வள அறிவியலில் டிகிரி அல்லது எம்.எஸ்சி.,(விலங்கியல் / உயிரியல்/ கடலோர மீன் வளர்ப்பு / கடலியல்), துணை ஆய்வாளர் பணிக்கு மீன்வள தொழில்நுட்ப பிரிவில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி., (விலங்கியல் / மீன்வள அறிவியல்) முடித்திருக்க வேண்டும்.

  பணிக்கான வயது வரம்பு:

  17.2022 அடிப்படையில் பொது பிரிவினர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை.

  சம்பளம் :

  ஆய்வாளருக்கு ரூபாய். 37,700 முதல் 1,10,500 வரை.

  துணை ஆய்வாளருக்கு ரூபாய். 35,900 முதல் 1,13,500 வரை.

  ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் பணிக்கான தேர்வு முறை:

  ஆன்லைனில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும், பின்னர் நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

  தேர்வுக்கான மையங்கள்:

  சென்னை, மதுரை,கோவை,திருச்சி, திருநெல்வேலி, சேலம்,வேலூர்.

  தேர்வு நாள்:

  மீன்வளத்துறை ஆய்வாளர் பணிக்கான தேர்வு நாள் 08.02.2023.

  காலை முதல் தாள் 9.30 முதல் - 12.30 மணி வரை நடக்கும்.

  மாலை இரண்டாம் தாள் 2.30 முதல் - 5.30 மணி வரை நடக்கும்.

  மீன்வளத்துறை துணை ஆய்வாளர் பணிக்கு தேர்வு நாள்: 07.02.2023. காலை முதல் தாள் 09.30 முதல் - 12.30 மணி வரை நடக்கும். மாலை இரண்டாம் தாள் 02.30 முதல் - 05.30 மணி வரை நடக்கும்.

  Also Read : அரசின் முத்திரைத்தாள் அச்சகத்தில் வேலை...மாதம் 67,000 வரை சம்பளம் - விண்ணப்பிக்க 3 நாட்களே உள்ளது

  விண்ணப்பிக்கும் முறை:

  www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

  விண்ணப்பிக்கக் கட்டணமாக நிரந்தர பதிவுக்கட்டணம் (ஓ.டி.ஆர்) ரூபாய்.150, தேர்வுக்கட்டணம் ரூபாய்.100.

  மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in  இணையதளத்தை அணுகவும்.

  ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 12.11.2022

  துணை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 11.11.2022.

  Published by:Janvi
  First published:

  Tags: Government jobs, Tamil Nadu Government Jobs, TNPSC