Home /News /employment /

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு நீதித்துறையில் வேலை.. ரூ. 65,500 சம்பளம்

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு நீதித்துறையில் வேலை.. ரூ. 65,500 சம்பளம்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணியில் காலியாக உள்ள பதவிகளுக்கு தற்காலிகமாக நியமனம் தொடர்பான விவரங்கள்.

    பெரம்பலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணியில் காலியாக உள்ள பதவிகளுக்கு தற்காலிகமாக நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    1.பதவியின் பெயர்: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை – III (தற்காலிகமானது)

    காலிப்பணியிடங்கள் : 07

    கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி

    சம்பளம் : 20,600 - 65,500

    2.பணி: தட்டச்சர் ( தற்காலிகமானது)

    காலிப்பணியிடங்கள் : 04

    கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி

    சம்பளம் : 19,500 – 62,000

    வயது வரம்பு: 01.07.2021 அன்று குறைந்தபட்ச வயது வரம்பு  18  - அதிகபட்சம் 32 வயது இருக்க வேண்டும்.

    உச்ச வயது வரம்பு : அதிதிராவிடர், பழங்குடி வகுப்பினர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவை பெண்களுக்கு அதிகபட்ச வயது 35வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு சலுகைகள் நடைமுறையிலுள்ள அனைத்து அரசு ஆணைகள் மற்றும் அரசு விதிமுறைகளின் படி செயல்படுத்தப்படும்.

    விண்ணப்பிக்க கடைசி நாள்:  விண்ணப்பங்களை தற்போது பணி செய்யும் விபரங்களுடன் கல்விச்சான்றிதழ்கள், ஜாதிச்சான்றிதழ்க மற்றும் முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்கள் சுய சான்றொப்பத்துடன் 20.12.2021 அன்று மாலை 5.45 மணிக்குள் முதன்மை மாவட்ட நீதிபதி அலுவலகத்திற்கு கிடைக்குமாறு தபாலில் அனுப்ப வேண்டும்

    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:  முதன்மை மாவட்ட நீதிபதி,

    பெரம்பலூர்

    காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, நேர்காணலை ஒத்திவைக்கவோ, நியமன அறிக்கையை ரத்து செய்யவோ முதன்மை மாவட்ட நீதிபதிக்கு முழு அதிகாரம் உண்டு.

    சான்றிதழ்களின் சரிபார்த்தலின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் நீதிமன்ற இணையதள வலைதளத்தின் மூலம் அழைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் விவரங்களுக்கு: https://districts.ecourts.gov.in/notification-temporary-post-steno-typist-and-typist-perambalur-district-judiciary-dated-04-12-2021 என்ற லிங்கில் சென்று தெரிந்துக்கொள்ளவும்.

    இதையும் படிங்க: போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனமாய் இருக்க வேண்டிய நேரம் இது.. ரூல்ஸ் எல்லாம் மாறிடுச்சி!





     

    PM Kisan status: ரூ. 2000 எப்போது கிடைக்கும் என்பதை செக் செய்வது எப்படி?




    Published by:Ramprasath H
    First published:

    Tags: Court, Employment, Employment news, Job search, Job vacancies, Job Vacancy

    அடுத்த செய்தி