Bank of Baroda வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளில் சேர விருப்பமும் தகுதியும் உடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Agriculture Marketing Manager
காலிப்பணியிடங்கள் : 47
வயது வரம்பு : குறைந்தபட்சம் 25 வயதில் இருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
தகுதி : விவசாயம், தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, கால்நடை அறிவியல், மீன்வள அறிவியல், மீன் வளர்ப்பு, வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் ஒத்துழைப்பு, வனவியல், வேளாண் உயிரி தொழில்நுட்பம், பட்டு வளர்ப்பு போன்ற எதாவதொரு பிரிவில் 4 ஆண்டுகள் இளநிலை படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் MBA அல்லது டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : வருடத்திற்கு ரூ. 18 லட்சம்
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணமாக ரூ.600 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்.சி / எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ரூ.100 செலுத்த வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.