ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழக அரசு மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழக அரசு மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை

தமிழக அரசின் மருத்துவமனையில் காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழக அரசின் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாகவுள்ள Radiographer, Physiotherapist, Multipurpose Health Worker, Security Guard போன்ற பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்காலிக அடிப்படையில் எடுக்கும் இந்த பணிக்கான முழு விவரத்தை இதில் காணலாம்.

  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்இடங்கள்சம்பளம்
  Radiographer2ரூ.13,300/-
  Physiotherapist1ரூ.13,300/-
  Multipurpose Health Worker6ரூ.8,500/-
  Security Guard4ரூ.8.500/-

  கல்வித்தகுதி:

  • Radiographer பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc Radiography / DRTT / DRDT / Degree / Certificate Course பெற்றிருக்க வேண்டும்.
  • Physiotherapist பணிக்கு Bachelor of Physiotherapy பெற்றிருக்க வேண்டும்.
  • Multipurpose Health Worker மற்றும் Security Guard 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தேர்வு செய்யப்படும் முறை:

  விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விண்ணப்பிக்கும் முறை:

  ஆர்வமுள்ளவர்கள் தங்கள் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் சுய விவரங்கள் அடங்கிய படிவத்தைப் புகைப்படத்துடன் இணைத்து தபால் மூலம் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

  அல்லது

  நேரிலும் சென்று கொடுக்கலாம்.

  Also Read : தேர்வில்லாத வேலை... மத்திய அரசின் ஹெலிகாப்டர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்கும் முறை!

  அனுப்பவேண்டிய முகவரி:

  முதல்வர், அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி

  விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 10.11.2022.  அதற்குப் பின்பு வரும் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

  Published by:Janvi
  First published:

  Tags: Government jobs, Govt hospital, Job vacancies, Tamil Nadu Government Jobs