ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

பிரசாதம் செய்யத் தெரிந்தவர்களுக்குக் கோவிலில் வேலை.. இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு..!

பிரசாதம் செய்யத் தெரிந்தவர்களுக்குக் கோவிலில் வேலை.. இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு..!

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் வேலை

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் வேலை

இந்து சமய அறநிலையத்துறை கீழ் இயங்கும் சென்னையில் உள்ள கோவிலில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்து சமய அறநிலையத்துறை கீழ் இயங்கும் சென்னையில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்களைப் பற்றி விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறையை இங்குத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.

  பணியின் விவரங்கள்: 

  பணியின் பெயர் பணியிடங்கள்சம்பள விகிதம்
  ஓதுவார்1ரூ.12,600/-
  பரிசாரகர்1ரூ.13,200/-
  காவலர்1ரூ.11,600/-
  இரவு காவலர்1ரூ.11,600/-
  திருவலகு1ரூ.10,000/-
  கால்நடை பராமரிப்பாளர்1ரூ.11,600/-

  வயது வரம்பு:

  2022 ஜூலை 1 அன்று 18 வயது பூர்த்தியானவராகவும், 45 வயது பூர்த்தியடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.

  கோவில் பணிக்கான தகுதிகள்:

  பணிதகுதி
  ஓதுவார்தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள் நடத்தும் மூன்றாண்டு பாடப்பிரிவை முடித்ததற்கான தேவாரப்பள்ளி வழங்குகின்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
  பரிசாரகர்தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். கோவிலின் பழக்க வழக்கத்திற்கேற்ப நைவேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும்.
  காவலர்தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  இரவு காவலர்தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  திருவலகுதமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  கால்நடை பராமரிப்பாளர்தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

  தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  விண்ணப்பதார்களில் பணிக்குத் தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also Read : தொழில் முனைவோருக்கு 5 நாள் சிறப்பு பயிற்சி: இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!

  விண்ணப்பிக்கும் முறை:

  விண்ணப்பப் படிவத்தை கோவில் அலுவலகத்தில் ரூ.100 செலுத்திப் பெற்றுக் கொண்டு வயது,கல்வித்தகுதி,மதம் மற்றும் சாதி சான்றிதழ்,விண்ணப்பிக்கும் பணியிடத்திற்கான சிறப்புத் தகுதிச் சான்று,முன் அனுபவச் சான்றிதழ்,நன்னடத்தை சான்று மற்றும் விண்ணப்பப் படிவம் ரசீது நகல் போன்றவற்றை வைத்து தபால் மூலம் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விண்ணப்பம் பெற வேண்டிய மற்றும் தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

  செயல் அலுவலர்,

  சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்,

  315, தங்கசாலை தெரு,சென்னை - 600 0033.

  பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 26.11.2022 மாலை 5.45 மணி வரை.

  மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்

  Published by:Janvi
  First published:

  Tags: Hindu Endorsements Dept, Jobs, Tamil Nadu Government Jobs