ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் இந்து அறநிலையத்துறையில் வேலை... உடனே விண்ணப்பிக்கலாம்..!

தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் இந்து அறநிலையத்துறையில் வேலை... உடனே விண்ணப்பிக்கலாம்..!

கோவிலில் வேலை

கோவிலில் வேலை

தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட சென்னையில் உள்ள கோயிலில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட சென்னையில் உள்ள  சித்தி புத்தி விநாயகர் & சுந்தரேஸ்வரர் திருக்கோயில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கான விவரங்களையும் விண்ணப்பிக்கும் முறையும் இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

  பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்காலிப்பணியிடங்கள்ஊதியம்
  கணினி இயக்குபவர் (Computer Operator)1Pay matrix -15 13,200 -41,800அடிப்படை சம்பளம் ரூ.13,200
  மின் பணியாளர்1Pay matrix -13 12,600 - 39,900அடிப்படை சம்பளம் ரூ.12,600
  அர்ச்சகர்1Pay matrix -14 13,200 -41,800அடிப்படை சம்பளம் ரூ.13,200
  ஓதுவார் (மூன்றாம் அழைப்பு)1Pay matrix -13 12,600 - 39,900அடிப்படை சம்பளம் ரூ.12,600
  சுயம்பாகி1Pay matrix -14 13,200 -41,800அடிப்படை சம்பளம் ரூ.13,200
  மேளக்குழு (நாதஸ்வரம் பணிக்கு)1Pay matrix -15 13,200 -41,800அடிப்படை சம்பளம் ரூ.15,300
  பகல் காவலர்1Pay matrix -12 11,600 -36,800அடிப்படை சம்பளம் ரூ.11,600
  இரவு காவலர்1Pay matrix -12 11,600 -36,800அடிப்படை சம்பளம் ரூ.11,600
  துப்புரவாளர்1Pay matrix -10 10,000 -31,500அடிப்படை சம்பளம் ரூ.10,000

  வயது வரம்பு:

  விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்று 18 வயது முழுமையடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

  பணிக்கான கல்வித்தகுதி:

  பணியின் பெயர்கல்வித்தகுதி
  கணினி இயங்குபவர்அரசு நிறுவனம் .அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட Diploma in Computer Science கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
  மின் பணியாளர்ஐடிஐ சான்றிதழ் மற்றும் மின் உரிமம் வாரியத்தின் பி- சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
  அர்ச்சகர்தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதாக வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
  ஓதுவார் (மூன்றாம் அழைப்பு)தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். தேவாரப்பாடசாலையில் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதாக வழங்கப்பட்ட சான்றிதழைப்பெற்றிருக்க வேண்டும்.
  சுயம்பாகிதமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். திருக்கோவில்களில் ஆகம விதிப்படி நைவேத்தியம் மற்றும் பிரசாத தயார் செய்யத் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் திருக்கோயில்களின் பூஜை மற்றும் திருக்கோயில்களின் பூஜை மற்றும் சடங்குகள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.
  மேளக்குழு (நாதஸ்வரம் பணிக்கு)தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசைப்பள்ளி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  பகல் காவலர்தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் தேவை.
  இரவு காவலர்தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் தேவை.
  துப்புரவாளர்தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் தேவை.

  விண்ணப்பிக்கும் முறை:

  ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்குக் கடைசி நாள் முடிவடைவதற்கு முன் தபால் மூலம் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய ஆன்லைன் முகவரி : https://hrce.tn.gov.in/

  தபால் அனுப்ப வேண்டிய முகவரி :

  செயல் அலுவலர், அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,இராயப்பேட்டை, சென்னை - 14.

  Also Read : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு எப்போது?

  தேர்வு செய்யப்படும் முறை:

  தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதார்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 17.11.2022 மாலை 5.45 மணி வரை.

  மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Hindu Endorsements Dept, Jobs, Tamil Nadu Government Jobs