ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

டிகிரி படித்தவரா? மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலை.. இன்றே கடைசி நாள்

டிகிரி படித்தவரா? மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலை.. இன்றே கடைசி நாள்

இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு

இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு

இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன கல்லூரியில்  பட்டப்படிப்பு முடித்தவருக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஸ்ரீ பெரும்பதூரிலுள்ள இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன கல்லூரியில் (National institute of youth development) ஒப்பந்த முறையில் பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  வேலையின் விவரங்கள்:

  பணியின் பெயர் : ஜீனியர் அசிஸ்டண்ட்

  காலியிடங்கள் : 3

  சம்பளம்: ரூ.30,000.

  கல்வித்தகுதி:

  ஏதாவதொரு இளநிலைப் பட்டப்படிப்புடன் Administration/Acadamic/Examination சம்மந்தப்பட்ட பணியில் 2 வருட பணி அனுபவ, பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் மற்றும் E-office system பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வில்  அடிப்படையில்  தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர் தேர்வுகள் பற்றிய விவரம் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

  விண்ணப்பக் கட்டணம்:

  பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.500. SC/PWD பிரிவினர்களுக்கு ரூ.300 கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

  Also Read : மாதம் ரூ.69,810 வரை சம்பளத்தில் மத்திய அரசு வங்கியில் வேலை - விண்ணப்பிக்க நவ. 4-ம் தேதியே கடைசி நாள்!

  விண்ணப்பிக்கும் முறை:

  www.rgniyd.gov.in என்ற இணையதளம்  மூலமாக  ஆன்லைன்  முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.  பின்னர் அந்த  விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனுடன் நகல்களை இணைத்து தபாலில் அனுப்ப வேண்டும். நேர்முகத் தேர்வின் போது தேவையான அனைத்து அசல் சான்றுகளையும் கொண்டு செல்ல வேண்டும்.

  ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 31.10.2022

  விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 04.11.2022.

  தபாலில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

  The Assistant Registrar (Administration), Rajiv Gandhi National Institute of Youth Development(RGNIYD). Sriperumbudur - 602105. Kancheepuram district.

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, College, Jobs