ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் : மத்திய அரசின் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் : மத்திய அரசின் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு

கன்டோன்மென்ட் போர்டு

கன்டோன்மென்ட் போர்டு

Central Govt job alert : மத்திய அரசின் கன்டோன்மென்ட் போர்டில் பல்வேறு பிரிவுகளில் உள்ள பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்திற்குக் கீழ் செயல்படும் கன்டோன்மென்ட் போர்டு, பெல்காம்-இல் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு படித்தவர்களில் இருந்து விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்கல்விசம்பளம்
உயர் பள்ளி ஹிந்தி துணை ஆசிரியர்1ஹிந்தி மொழியில் பட்டப்படிப்புரூ.33,450-62,600/-
தச்சர்110 ஆம் வகுப்பு தேர்ச்சிரூ.18,600-32,600/-
மருத்துவச்சி1ஜெனரல் நர்சிங் & மருத்துவச்சி பாடத்தில் டிப்ளமோரூ.23,500-47,650/-
மஸ்தூர்110 ஆம் வகுப்பு தேர்ச்சிரூ.17,000-28,950/-
வரைவாளர்1Civil Engineering / Civil Draftsmanship / Architecture போன்ற பாடங்களில் டிப்ளமோரூ.33,450-6,2600/-
மெக்கானிக்1Mechanical Engineering / Automobile Engineering பாடங்களில் மூன்று ஆண்டுகள் டிப்ளமோரூ.21,400-42,000/-
ஸ்டெனோகிராபர்112 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஸ்டெனோகிராபர் சான்றிதழ்ரூ.27,650-52,650/-
தோட்டக்காரர்110 ஆம் வகுப்பு தேர்ச்சி தோட்டக்கலையில் சான்றிதழ்ரூ.17,000-28,950/-
தாயீ (மருத்துவச்சி)110 ஆம் வகுப்பு தேர்ச்சிரூ.17,000-28,950/-
தூய்மை பணியாளர்110 ஆம் வகுப்பு தேர்ச்சிரூ.17,000-28,950/-

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு வயது வரம்பு  21 இல் இருந்து 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்குத் தேர்வு மூலம் பணியாளர்கள் நியமிக்கப்படுவர். விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களுக்குத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் அனுப்பப்படும். அதில் தேர்வு குறித்த விவரங்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு : ரூ.1,30,800/- வரை சம்பளம்..உடனே விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசின் இந்த பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://belgaum.cantt.gov.in/recruitment/

விண்ணப்பிக்கக் கடைசி நாட்கள்:

பணிகள்தேதிகள்
ஹிந்தி துணை ஆசிரியர்,தச்சர்21-12-2022
மருத்துவச்சி,மஸ்தூர்14-12-2022
வரைவாளர்,மெக்கானிக்26-12-2022
ஸ்டெனோகிராபர்,தோட்டக்காரர்31-12-2022
தாயீ (மருத்துவச்சி),தூய்மை பணியாளர்30-12-2022

First published:

Tags: Central Government Jobs, Jobs