ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை : விண்ணப்பிக்க நவ.22-ம் தேதியே கடைசி நாள்!

மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை : விண்ணப்பிக்க நவ.22-ம் தேதியே கடைசி நாள்!

தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம்

தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம்

Central govt job alert : தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகத்தில் கீழ் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 22 ஆம் தேதியே கடைசி நாளாகும். இந்த வேலைக்கு தகுதியும் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  பணியின் விவரங்கள்:

  பதவியில் பெயர்பணியிடம்சம்பளம்
  GeneralManager(Project)1ரூ.1,10,000/-
  Asstt. Engineer(Civil )1ரூ.58,819/-
  Junior Engineer(Civil )4ரூ.27,000/-

  வயது வரம்பு :

  இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 60 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கல்வித்தகுதி:

  பணியின் பெயர்தகுதி
  GeneralManager(Project)B.Tech Civil Engineering மற்றும் 12 வருடம் அனுபவம் தேவை.
  Asstt. Engineer(Civil )Civil Engineering பிரிவில் பட்டப்படிப்பு
  Junior Engineer(Civil )Civil Engineering பிரிவில் 55% சதவீதம் தேர்ச்சியுடன் டிப்ளமோ.

  தேர்வு செய்யப்படும் முறை:

  இப்பணிகளுக்கு விண்ணப்பதார்களில் தகுதியானவர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also Read : மத்திய அரசு வேலை.. மாதம் 2,00,000 சம்பளம்..! உடனே விண்ணப்பியுங்கள்

  விண்ணப்பிக்கும் முறை:

  இப்பணிகளுக்கு https://www.becil.com/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : https://becilregistration.in/

  ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 22.11.2022.

  மேலும் விவரங்களுக்கு : அறிவிப்பு 1 / அறிவிப்பு 2 .

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, Jobs