இந்தியன் ரயில்வேயில் மேற்கு ரயில்வே வேலைவாய்ப்பு பிரிவில் வெளியிட்ட அறிவிப்பில் கலைக் கோட்டாவில் நிலை 2 இல் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் இதோ.
பணியின் விவரங்கள்:
கலைப்பிரிவு | பணியிடம் |
ஆக்டாபேட் இன்ஸ்ட்ரூமென்ட் பிளேயர் | 1 |
ஆண் பாடகர் | 1 |
வயது வரம்பு :
இந்த கோட்டாவில் விண்ணப்பிக்க 18 வயதில் இருந்து 30 வயது வரை இருக்க வேண்டும்.
சம்பளம்:
7வது சிபிசி நிலை 2 படி ரூ.19,900-63,200 வரை சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
12 ஆம் வகுப்பு 50 % மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி தொழிற்பயிற்சி முடித்திருக்க வேண்டும் அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
கலை தகுதி:
ஆக்டாபேட் இன்ஸ்ட்ரூமென்ட் பிளேயர் சான்றிதழ்/டிப்ளமோ படித்திருக்க வேண்டும். அதே போல் ஆண் பாடகர் பிரிவில் பாடல் சான்றிதழ் படிப்பு தேவை.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தியன் ரயில்வேயில் கலைக் கோட்டாவில் விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://rrc-wr.com/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக ரூ.500/- செலுத்த வேண்டும். SC /ST / Ex-Servicemen / Persons with Disability பிரிவினர் ரூ.250/- கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி: https://rrc-wr.com/Cultural/Login
எழுத்துத் தேர்வுக்குப் படிக்க வேண்டிய பாடத்திட்டம் மற்றும் மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Railways, Railway Jobs