தமிழக அரசின் ஈரோடு மாவட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான விவரங்கள் பின் வருமாறு :-
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் |
சமையலர் | 9 |
சலவையாளர் | 1 |
வயது வரம்பு:
SC,SCA பிரிவினருக்கு அதிகபட்சம் 37 வயது, MBC, BC பிரிவினருக்கு அதிகபட்சம் 34 வயது, பொதுப் பிரிவினருக்கு 32 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
இப்பணிகளுக்குத் தமிழ் மொழியில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் சுய விவரங்களுடன், கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை போன்றவற்றில் நகல்களை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். ஆதரவற்ற பெண்கள் மற்றும் முன்னுரிமை கோருபவர்கள் அதற்கான தகுந்த சான்றிதழ் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
Also Read : 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும் ; மாதம் ரூ.63,200 சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை!
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், ஈரோடு.
தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்பக் கடைசி நாள் : 15.12.2022 மாலை 5.00 மணி வரை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Govt hospital, Job Vacancy, Jobs