சென்னை கிண்டியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்!

இந்த முகாமில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. முகாமில் 500-க்கும் அதிகமான நபர்கள் பல்வேறு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

news18
Updated: November 15, 2018, 5:52 PM IST
சென்னை கிண்டியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்!
மாதிரிப் படம்
news18
Updated: November 15, 2018, 5:52 PM IST
சென்னை, கிண்டியில் நாளை (நவம்பர் 16) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் பல்வேறு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இதுகுறித்து தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து கிண்டி-ஆலந்தூர் சாலையிலுள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.

யார் யார் பங்கேற்கலாம்? நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த முகாம் நடைபெறும். இதில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்த 35 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.

இந்த முகாமில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. முகாமில் 500-க்கும் அதிகமான நபர்கள் பல்வேறு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு 044 – 22501525, 22505002, 22505006 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Also watch
First published: November 15, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...