ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

10ம் வகுப்பு தகுதி போதும்.. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்: சென்னையில் நாளை நடைபெறுகிறது

10ம் வகுப்பு தகுதி போதும்.. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்: சென்னையில் நாளை நடைபெறுகிறது

வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

job fair: 10, 12 மற்றும் டிகிரி படிப்பை முடித்த 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 1 minute read
  • Last Updated :

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் சென்னையில் நாளை நடைபெறுகிறது. இதில்15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

மத்திய அரசின் கீழ் செயல்படும் சென்னை கிண்டியிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்க்கை மேம்பாட்டு சேவை மையம் (NCSC-DA) சார்பில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்திற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று  மாற்றுத் திறனாளிகள், சுயதொழில் மூலம் வாழ்க்கை மேம்பாடு அடைவதற்கு உதவியாக, “சுயதொழில் வங்கி கடன் பரிந்துரை முகாம் நடைபெற்றது.

இந்நிலையில், நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்க்கை மேற்பாட்டு சேவை மையத்தின் இணை இயக்குநர் (பொறுப்பு) சங்கீதா பற்குணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான  தேசிய மேம்பாட்டு மையம் சார்பில் 12.03.2022 ( சனிக்கிழமை) மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க:  8-ம் வகுப்பு தகுதிக்கு நாமக்கல்லில் வருவாய்த்துறையில் வேலை வாய்ப்பு

காலை 9.30 மணி முதல் மாலை 3 மணிவரை நடைபெறும் இந்த முகாமில் 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று வேலைவாய்ப்பை வழங்க உள்ளன. 10, 12 மற்றும் டிகிரி முடித்த 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான  தேசிய அடையாள அட்டை, சுய விவகரம், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலுடன் வந்து முகாமில்  பங்கேற்கலாம்’ என்றூ தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Job Fair