CMRL Recruitment 2021 : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

மாதிரி படம்

தற்போது சென்னை மெட்ரோ இன்ஜினியரிங் படித்தவர்கள், பிடெக், டிப்ளமோ படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது

  • Share this:
சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டட் சார்பாக ஜெனரல் மேனேஜர், கூடுதல் ஜெனரல் மேனேஜர், டெபுட்டி ஜெனரல் மேனேஜர் பணிகளுக்கான காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இதற்காக தற்போது சென்னை மெட்ரோ இன்ஜினியரிங் படித்தவர்கள், பிடெக், டிப்ளமோ படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய பணிகளுக்கு விண்ணப்பிக்க தபால் மூலம் கடந்த மே 4ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். இதற்காக இந்த ஆண்டுக்கான விண்ணப்பத்தை நிரப்பி சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டட் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஜெனரல் மேனேஜர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ, அல்லது பி.டெக் படித்திருக்கவேண்டும். ரயில்வே அல்லது ஹைவே சாரிபில் பெரிய பாலங்கள் கட்டுமானம் மற்றும் மெட்ரோ ரயில் பணிகள் ஆகியவற்றில் 23 வருடங்கள் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 5 முதல் 8 வருடங்கள் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளில் பெற்றிருக்க வேண்டும். காண்டிராக்ட் மேனேஜ்மென்ட் சம்பந்தபான பணிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

கூடுதல் ஜெனரல் மேனேஜர் (Additional General Manager Safety)

B.E/B.Tech ஆகியவற்றை பிரபலமான கல்லூரிகளிலோ, பல்கலைக்கழகங்களிலோ படித்திருக்க வேண்டும். கூடுதலாக பட்டமேற்படிப்பு அல்லது டிப்ளமோவை இன்ட்ஸ்ட்ரியல் சேஃப்டியில் படித்திருக்க வேண்டும்.

கூடுதல் ஜெனரல் மேனேஜர் லீகல் (Additional General Manager (Legal)): இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிரபலமான கல்லூரி, பல்கலைக்கழத்தில் சட்டப்படிப்பை 50 % மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 17 வருடங்கள் பொதுத்துறை நிறுவனங்களில் சட்ட ரீதியான பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அல்லது ஆண்டுக்கு குறைந்தது ரூ.250 கோடி வருமானம் வருகின்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்துடன் சமீபத்திய நிதி ஆண்டுக்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

கூடுதல ஜெனரல் மேனேஜேர் (QA7/QC) (Additional General Manager QA/QC)

விண்ணப்பதாரர் பி.இ/பி.டெக் சிவில் துறையில் பிரபலமான கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் படித்திருக்க வேண்டும். 17 வருடங்கள் குவாலிட்டி அஸ்யூரன்ஸ் / குவாலிட்டி கன்ட்ரோல் மற்றும் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளில் குவாலிட்டி அஸ்யூரன்ஸ் / குவாலிட்டி கன்ட்ரோல் துறையில் 8 வருடங்கள் அனுபவம் பெறறிருக்க வேண்டும். குவாலிட்டி சம்பந்தமான பட்டமேற்படிப்பு அல்லது டிப்ளமோ படித்திருப்பது கூடுதல் அனுகூலமாக இருக்கும்.

கூடுதல் ஜெனரல் மேனேஜர் நிதி மற்றும் அக்கவுண்ட்ஸ் (Deputy General Manager (Finance & Accounts))

விண்ணப்பதாரர் பிரபலமான கல்லுரி அல்லது பல்கலைக்கழகத்தில் படித்து இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்டட் அக்கவுண்ட்ஸ் ஆஃப் இந்தியாவில் மெம்பராக இருக்க வேண்டும். இந்தத் துறையில் 13 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்சொன்ன பணிகளுக்கு தகுதியுள்ளவர்கள் https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/CMRL-HR-DEP-03-2021.pdf என்ற இணைய லிங்க்கை கிளிக் செய்து அதில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பிக்க வேண்டும்.
Published by:Vijay R
First published: