ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

காட்சிப் படம்

காட்சிப் படம்

Job alerts: பூர்த்தி செய்யப்பட்ட  விண்ணப்பங்கள் வரும் 30ம் தேதி மாலை 5.45-க்குள் வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chengalpattu |

  செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation Officer) பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சட்டத்தில்  இளங்கலை பட்டம்  பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

  மாத ஊதியம்ரூ.27,804/- (தொகுப்பூதியம் )
  காலியிடம்1
  தன்மைஒப்பந்த அடிப்படை
  வயது வரம்பு40 வயது பூர்த்தி  அடைந்திருக்க கூடாது
  கல்வி தகுதிஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து இளங்கலை சட்ட படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான திட்டங்களில் அரசு மற்றும் அரசு சாராத  நிர்வாகத்தில் 2 வருட முன் அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை தொடர்பான விவகாரத்தில்  நல்ல புரிதல் இருக்க வேண்டும் 

  ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் செங்கல்பட்டு மாவட்ட இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபங்களை அனுப்ப வேண்டிய முகவரி,

  மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,

  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

  அரசினர் சிறப்பு இல்ல வளாகம்

  GST சாலை

  தாலுகா காவல் நிலையம் அருகில்

  செங்கல்பட்டு - 603 002

  இதையும் வாசிக்க: சொந்த முயற்சியில் தரமான ரெஸ்யூம் தயார் செய்வது எப்படி?

  பூர்த்தி செய்யப்பட்ட  விண்ணப்பங்கள் வரும் 30ம் தேதி மாலை 5.45-க்குள் வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Tamil Nadu Government Jobs