மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்திய உணவுக் கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் Assistant General Manager பணி மற்றும் Medical Officer பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உணவுக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 :
பல்வேறு பிரிவுகளில் Assistant General Manager பணி மற்றும் Medical Officer பணிக்கு 85+ காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Assistant General Manager கல்வித்தகுதி :
General Administration – Post Graduate degree முடித்திருந்தால் போதுமானது.
Technical – B.Sc. in Agriculture அல்லது B.Tech degree or B.E degree in Food Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Accounts – ICAI நிறுவனத்தில் Associate membership ஆக இருக்க வேண்டும்.
Law – Degree in Law பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Medical Officer – M.B.B.S. பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
FCI ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை வழங்கப்படும்.
இந்திய உணவுக் கழகத்தில் தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Online Test மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.1,000/-
SC/ST/PwBD மற்றும் Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.03.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.