இந்திய விமானப் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய விமானப் படை

இந்திய விமான படையில் இருந்து தற்போது திருமணமாகாத ஆண் இந்திய குடிமக்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • Share this:
  இந்திய விமானப் படையில் Group ‘Y’ (Non-Technical Trades) பணிகளுக்கு விளையாட்டு கோட்டாவில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

  IAF விமானப்படை பணியிடங்கள் :

  Group ‘Y’ (Non-Technical Trades) பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  CASB வயது வரம்பு :

  விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 17 முதல் அதிகபட்சம் 21 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

  IAF Airmen கல்வித்தகுதி :

  Intermediate / 10 / Class XII அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  மேலும் விளையாட்டு துறையில் ஏதேனும் ஒரு Achievement பெற்று இருக்க வேண்டும்.

  தேர்வு செயல்முறை :

  விண்ணப்பதாரர்கள் Physical Fitness Test, Sports Skill Trials, Medical Examination மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம். பதிவு செய்வோருக்கான தேர்வுகள் அனைத்தும் வரும் 26.04.2021 அன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது.

  விண்ணப்பிக்கும் முறை :

  விருப்பமுள்ளவர்கள் ஒரு தாளில் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி போல் விண்ணப்பங்களை நிரப்பி அதனுடன் கல்வி மற்றும் விளையாட்டு சான்றிதழ் ஆகியவற்றினை இணைத்து iafsportsrec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தேர்வு நடைபெறுவதற்கு முன்னர் அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  இணையத்தளம் முகவரி: 

  https://airmenselection.cdac.in/CASB/upcoming.html

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: