எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனமான Oil India நிறுவனத்தில் அசாம் மற்றும் அருணாச்சல்பிரதேசத்தில் ஜூனியர் இன்ஜினியர் பணிகளுக்கு 146 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: HRAQ/REC-WP-B/2021-25
அறிவிப்பு நாள் : 10-11-21
பணியின் பெயர் & காலிபணியிடங்கள்:
ஜூனியர் இன்ஜினியர் ( Chemical ) – 08 காலிபணியிடங்கள்
ஜூனியர் இன்ஜினியர் (Civil ) - 12
ஜூனியர் இன்ஜினியர் – ( Computer Engineering ) -05
ஜூனியர் இன்ஜினியர் – ( Electical ) – 21
ஜூனியர் இன்ஜினியர் – (Electronics & Telecommunication) - 03
ஜூனியர் இன்ஜினியர் – (Instrumentation Technology) - 32
ஜூனியர் இன்ஜினியர் – ( Mechanical ) 65
கல்வித்தகுதி : குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பொறியியல் பாடப் பிரிவில் 3 வருடம் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : 37500 - 1,45,000
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18-லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடம் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: ஆன்லைன் மூலமாக ரூ.200 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ST, முன்னாள் இராணுவத்தினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது)
விண்ணப்பிக்கும் முறை:
www.indian-oil.com என்ற இணையதளத்தின் Current Openings பகுதியில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 09-12-21
கூடுதல் விபரங்களுக்கு www.indian-oil.com என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துக்கொள்ளவும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Engineering student, Job search, Job vacancies, Recruitment, Tamil News