Home /News /employment /

புதுச்சேரி ஜிப்மரில் ரூ.60,000 சம்பளத்தில் வேலை - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி ஜிப்மரில் ரூ.60,000 சம்பளத்தில் வேலை - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி ஜிப்மரில் சூப்பர் வேலை

புதுச்சேரி ஜிப்மரில் சூப்பர் வேலை

JIPMER Recruitment 2022 : ஜிப்மரில் (JIPMER) காலியாக உள்ள Tutor in Speech Pathology & Audiology பணிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது என்பதை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    ஜவஹர்லால்நேரு பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சுருக்கமாக ஜிப்மர் (JIPMER) என்றழைக்கப்படும் இந்நிறுவனம் புதுச்சேரியில் உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. இந்நிறுவனம் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையையும் கொண்டுள்ளது. பல்வேறு மருத்துவப்படிப்புகளை இந்நிறுவனம் வழங்குவதால், இந்திய மாணவர்கள் மட்டுமின்றி அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களும் இக்கல்லூரியில் பயில்கின்றனர்.

    இங்கு காலியாக உள்ள Tutor in Speech Pathology & Audiology பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் காலியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பியுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :















































    வேலையின் பெயர்Tutor in Speech Pathology & Audiology on contract basis
    காலியாக உள்ள இடம் விவரம்One (UR) ஒரு இடம் காலியாக உள்ளது
    சம்பள விவரம்மாதம் ₹60,000/- (ஒருங்கிணைந்த ஊதியம்) (₹60,000/- per month (Consolidated pay)
    கல்வித் தகுதி மற்றும் அனுபவம்

    அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் Speech & Language Pathology or Audiology Post Graduate படித்திருக்க வேண்டும்.

    (அல்லது)

    அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் Speech & Language Pathology or Audiology டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    3 வருடம் ஆசிரியராக பணி புரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.

    தமிழ் அறிவு இருக்க வேண்டும்.

    வயதுத் தகுதி 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறைதேர்வு முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
    வயதுத் தகுதி35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் விவரம்General/ OBC : Rs. 500/-
    SC/ST/PWD/Ex-Serviceman : Rs. 250/-
    PWD Candidates : Nil
    விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறைஆன்லைன் (Online)
    விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் & ஆஃப்லைன்
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரிShri Hawa Singh, Senior Administrative Officer, Room No. 210, II floor, Administrative Block, JIPMER, Puducherry 605006
    விண்ணப்பிக்க கடைசி தேதி01.09.2022ம் தேதிக்குள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

    இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி ?

    • அதிகாரப்பூர்வ வலைத்தளமான jipmer.edu.in -க்கு செல்லவும்.

    • அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை முழுமையாக படிக்கவும்.

    • JIJIPMER Jobs Application Form 2022 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.

    • அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து

    • ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.

    • அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.

    • விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.

    • எதிர்கால பயன்பாட்டிற்காக உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

    • விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


    அறிவிப்பினை பெற

    https://jipmer.edu.in/announcement/recruitment-post-assistant-professor-contract-basis-jipmer-puducherry-and-jipmer

    இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி