ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரூ.60,000 வரை மாதச் சம்பளம்... 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. மாவட்ட ஊராட்சியில் இளைஞர்களுக்கு சூப்பர் வேலை

ரூ.60,000 வரை மாதச் சம்பளம்... 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. மாவட்ட ஊராட்சியில் இளைஞர்களுக்கு சூப்பர் வேலை

ஊரக வளர்ச்சி

ஊரக வளர்ச்சி

TN job alert : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள 5 ஓட்டுநர்கள் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், தமிழ் வழியில் பயின்ற நபர்கள், ஆதரவற்ற விதவை, முதல்தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நியமனங்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: 5

தகுதி:  8-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌/ தகுதியான ஓட்டுநர் உரிமம்‌ பெற்று நடப்பில் இருக்க வேண்டும்/ மோட்டார் வாகனங்கள் ஒட்டியமைக்கான நடைமுறை அனுபவம்  5 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

ஊதியம்:  ரூ. 19500 முதல் ரூ. 62000 வரை

வயது வரம்பு: 1.7.2022 அன்று 18- 32 வயது வரம்புக்குள் இருக்க வேண்டும். பொது பிரிவினர் அல்லாத இதர பிரிவினர் 34க்கு கீழும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 42க்கு கீழும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் இணையத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை வைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும்.

Also read2023ல் குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியாகும்.... குரூப் IV தேர்வில் மாற்றமில்லை - டிஎன்பிஎஸ்சி!

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),

மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சிப்பிரிவு)

வளர்ச்சி ஒன்றிய அலுவலகம் முதல் தளம்,

மயிலாடுதுறை - 609001.

மேலும் விவரங்களுக்கு, இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.

First published:

Tags: Jobs, Tamil Nadu Government Jobs