ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? தமிழக அரசில் ஓட்டுநர் வேலை..விவரங்கள் இதோ..!

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? தமிழக அரசில் ஓட்டுநர் வேலை..விவரங்கள் இதோ..!

ஓட்டுநர் வேலை

ஓட்டுநர் வேலை

TN job alert : தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஓட்டுநர் வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வெளியிட்ட அறிவிப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை பிரிவில் பழங்குடியினருக்கான சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டத்தில் ஈப்பு ஓட்டுநர் பணிக்கான காலியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு தகவல் வெளியாகியுள்ளது.

  பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்ஈப்பு ஓட்டுநர் (jeep driver)
  பணியிடம்1
  ஊர்மதுரை
  தேர்வு விதம்நேரடி நியமனம்.
  கல்வித்தகுதி8 வகுப்பு தேர்ச்சி
  வயது18 - 37 வயது வரை. முன்னாள் இராணுவத்தினர் 18 -55 வரை.
  பணிக்குத் தேவையான தகுதிகள்ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.5 ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.

  தேர்வு செய்யப்படும் முறை:

  நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

  குறிப்பு : பழங்குடியினர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

  Also Read : தமிழக சத்துணவு திட்டப்பிரிவில் வேலை... கணினி இயக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

  விண்ணப்பிக்கும் முறை:

  மதுரை மாவட்ட அங்கீகரிக்கப்பட்ட இணையத்தளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.

  ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://cdn.s3waas.gov.in/

  விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி),

  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு),

  மதுரை - 20.

  விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 15.11.2022. மாலை 5.45 வரை.

  மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்

  Published by:Janvi
  First published:

  Tags: Jobs, Tamil Nadu Government Jobs