தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு கோயம்புத்தூரில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பிக்க இறுதி நாள் நெருங்கிவிட்டது. இப்பணிக்கு உடனடியாக விண்ணப்பிக்க முழு விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | வயது | சம்பளம் |
ஈப்பு ஓட்டுநர் | 3 | அதிகபட்சம் 34 வயது | ரூ.19,500 – 62,000/- |
இரவுக்காவலர் | 5 | அதிகபட்சம் 34 வயது | ரூ.15,700 – 50,000/- |
கல்வித்தகுதி:
பணியின் பெயர் | கல்வித்தகுதி |
ஈப்பு ஓட்டுநர் | 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 5 அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும். |
இரவுக்காவலர் | தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த தமிழக அரசுப் பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் இணையத்தளத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : சென்னை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : விண்ணப்பம் 1 / விண்ணப்பம் 2
விண்ணப்பத்தைத் தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
ஆட்சியர் (வளர்ச்சி) மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் கோவை – 641018
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 05.12.2022 மாலை 5.45 வரை.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs, Tamil Nadu Government Jobs