Home /News /employment /

அக்னிபத் போராட்ட எதிரொலி: திட்டமிட்டபடி ஜூன் 20ம் தேதி ஜேஇஇ தேர்வு தொடங்குமா?

அக்னிபத் போராட்ட எதிரொலி: திட்டமிட்டபடி ஜூன் 20ம் தேதி ஜேஇஇ தேர்வு தொடங்குமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக வட மாநிலங்களில் நிலவும் பதற்றம் காரணமாக ஜேஇஇ முதன்மைத் தேர்வு தள்ளிவைக்கப்படுமா? என்ற கேள்வியும் மாணவர்கள் மத்தியில்  நிலவுகிறது.

    2022 ஜேஇஇ தேர்வு மையங்களுக்கான விவரத்தை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேர்வுக்கான அனுமதி நுழைவுச் சீட்டு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    https://jeemain.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  இதுதொடர்பான விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பதிவு எண்/பிறந்த தேதி போன்ற தகவலை  அளித்து தேர்வு மையங்கள் தொடர்பான விவரங்களை அறியலாம். தேர்வு அனுமதிச் சீட்டு தனியாக வெளியிடப்படும். இது, தேர்வு மையங்களுக்கான நகரங்கள் தொடர்பான விவரங்களை  முன்கூட்டியே அறிவிக்கும் ஒரு நடைமுறையாகும். தேர்வுக்கான அனுமதிச் சீட்டு விரைவில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

    2022 ஏப்ரல் மாத முதற்கட்ட அமர்வுக்கான தேர்வு ஜூன் 20ம் தேதி தொடங்குகிறது. 29ம் தேதி வரை 9 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஷிஃப்டுகளில் - காலை 09:00 முதல் 12:00 மணி வரை, பிற்பகல் 3 :00 மணி முதல் மாலை 6 வரை தேர்வு நடைபெறும்.

    பொதுவாக, தேர்வுத் தேதிக்கு 10 நாள் முன்னதாக மின்னணு அனுமதி நுழைவுச் சீட்டு வெளியிடப்படும். ஆனால், தற்போது அதிக கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக வட மாநிலங்களில் நிலவும் பதற்றம் காரணமாக ஜேஇஇ முதன்மைத் தேர்வு தள்ளிவைக்கப்படுமா? என்ற கேள்வியும் மாணவர்கள் மத்தியில்  நிலவுகிறது.

    அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். jeemain.nta.nic.in மற்றும் www.nta.ac.in

    வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். 011- 40759000/011-69227700

    அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? 

    jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அனுமதி நுழைவுச் சீட்டில் தேர்வு மையம் , ஷிஃப்டு உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற்றிருக்கும்.

    இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வின் போது கட்டாயம் அனுமதிச் சீட்டை எடுத்து வர வேண்டும். மேலும், அனுமதிச் சீட்டில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நிபந்தனைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

    இதையும் வாசிக்க:  சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியீடு

    இதற்கிடையே, இரண்டாம் கட்ட ஜேஇஇ முதன்மை தேர்வுக்கான (JEE (Main) – 2022 Session 2 ) விண்ணப்ப செயல்முறை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கு உரிய கடைசி நாள் ஜூன் 30 ஆகும்.

    TNPSC Recruitment: இந்து சமய அறநிலையத்துறையில் வேலை... விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்...

    ஜுலை 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறவுள்ளன.

    'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக வட மாநிலங்களில் நிலவும் பதற்றம் காரணமாக ஜேஇஇ முதன்மைத் தேர்வு தள்ளிவைக்கப்படுமா? என்ற கேள்வியும் மாணவர்கள் மத்தியில்  நிலவுகிறது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Agnipath, Exam

    அடுத்த செய்தி