ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மத்திய அரசின் யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெடில் பயிற்சியுடன் வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசின் யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெடில் பயிற்சியுடன் வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

மத்திய அரசின் யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ITI Trade Apprentices Training அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மத்திய அரசின் யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ITI Trade Apprentices Training அறிவிப்பின் படி ITI Trade வெவ்வேறு பிரிவுகளில் 239 காலியிடங்களுக்கான பயிற்சி ஆட்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  ITI Trade Apprentices Training பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்காலிப்பணியிடங்கள்
  Fitter80
  Electrician80
  Welder [Gas & Electric]40
  Turner/Machinist12
  Instrument Mechanic05
  Mech. Diesel/Mech. MV12
  Carpenter05
  Plumber05
  மொத்தம்239

  வயது வரம்பு:

  குறைந்தபட்சம் 18 வயதிலிருந்து அதிகபட்ச 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  கல்வித்தகுதி :

  10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஐடிஐ-யில் தேவையான பாடத்திற்கேற்ற தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

  சம்பளம்:

  இப்பணிக்குத் தேர்வு செய்யப்படும் பயிற்சியாளருக்கு மாத உதவித்தொகை [Rule 11 of Apprenticeship Rules, 1992 படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தேர்வு செய்யப்படும் முறை:

  ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் ஐடிஐ-யில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் merit basis முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also Read : தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் இந்து அறநிலையத்துறையில் வேலை... உடனே விண்ணப்பிக்கலாம்..!

  விண்ணப்பிக்கும் முறை:

  அரசின் Apprentices பயிற்சிக்கான அதிகாரப்பூர்வத்தளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

  ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : https://apprenticeshipindia.gov.in/

  விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.11.2022.

  Published by:Janvi
  First published:

  Tags: Apprentice job, Central Government Jobs, Jobs