தொலைதொடர்பு நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே அப்ளை பண்ணுங்க..

news18
Updated: September 22, 2018, 8:47 PM IST
தொலைதொடர்பு நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே அப்ளை பண்ணுங்க..
news18
Updated: September 22, 2018, 8:47 PM IST
நாட்டின் முக்கிய தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான இந்திய தொலைபேசி தொழிற்சாலை (ஐடிஐ) நிறுவனத்தில் அசிஸ்டென்ட் எக்ஸியூட்டிவ் என்ஜினியர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எவ்வளவு காலியிடங்கள்: அசிஸ்டென்ட் எக்ஸியூட்டிவ் என்ஜினியர் பணிக்கு 60 காலியிடங்களும், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு 50 காலியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிக்கேஷன், டெலிகம்யூனிக்கேஷன், மெக்கானிக்கல், கெமிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் டிப்ளமா என்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அசிஸ்டென்ட் எக்ஸியூட்டிவ் என்ஜினியர் பணிக்கு மேற்கண்ட பிரிவுகளில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: அசிஸ்டென்ட் எக்ஸியூட்டிவ் என்ஜினியர் பணிக்கு விண்ணப்போரின் வயது 28-க்கு மிகாமல் இருக்க வேண்டும். டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கான வயது வரம்பு 30 ஆகும். எஸ்சி, எஸ்டி பிரிவினர், ஓபிசி பிரிவினர், முன்னாள் படை வீரர்கள் உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கடைசி தேதி: ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி செப்டம்பர் 25. நகல் விண்ணப்பங்களை செப்டம்பர் 27-ம் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.itiltd-india.com என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.
First published: September 22, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...