துணை ராணுவப் படையில் 218 பேருக்கு வேலைவாய்ப்பு!

இந்த 218 பணியிடங்களில் 185 இடங்கள் ஆண்களுக்கும், 33 இடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

news18
Updated: November 25, 2018, 5:53 PM IST
துணை ராணுவப் படையில் 218 பேருக்கு வேலைவாய்ப்பு!
இந்திய திபெத்திய எல்லைக் காவல் படையினர்
news18
Updated: November 25, 2018, 5:53 PM IST
துணை ராணுவப் படைகளில் ஒன்றான இந்திய திபெத்திய எல்லைக் காவல் படையில் (.டி.பீ.பி) கான்ஸ்டபிள் (டெலிகாம் பிரிவு) பணிக்கு 218 பேர் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

பெண்களுக்கு 33 இடங்கள்: இந்த 218 பணியிடங்களில் 185 இடங்கள் ஆண்களுக்கும், 33 இடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 110 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 59 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 33 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 16 இடங்களும் உள்ளன.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு.

 கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ. படித்திருந்தால் கூடுதல் தகுதியாக கொள்ளப்படும்.

 விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல், உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில்  விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி நவம்பர் 27. மேலும் விவரங்களுக்கு www.recruitment.itbpolice.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

Also watch

First published: November 25, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...