விளையாட்டு வீரர்களுக்கு எல்லைக் காவல் படையில் 101 பணியிடங்கள்!

இந்திய திபெத்திய எல்லைக் காவல் படையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பின் கீழ் 101 பணியிடங்கள் காலியாக உள்ளன.

news18
Updated: November 3, 2018, 7:03 PM IST
விளையாட்டு வீரர்களுக்கு எல்லைக் காவல் படையில் 101 பணியிடங்கள்!
இந்திய திபெத்திய எல்லைக் காவல் படையினர் (கோப்புப் படம்)
news18
Updated: November 3, 2018, 7:03 PM IST
இந்திய திபெத்திய எல்லைக் காவல் படையில் (ஐ.டி.பீ.பி) விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பின் கீழ் 101 பணியிடங்கள் காலியாக உள்ளன. குரூப் சி பிரிவைச் சேர்ந்த இந்த பணியிடங்களில் ஆண், பெண் இருபாலரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

எந்தெந்த பிரிவுகள்: கான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி) பிரிவின் கீழ் தேர்வு செய்யப்படவுள்ள இப்பணியிடங்களுக்கு ஜூடோ, மல்யுத்தம், பளு தூக்குதல், கால்பந்து, குத்துச்சண்டை, வில்வித்தை, ஜிம்னாஸ்டிக்ஸ், கபடி, தடகளம், துப்பாக்கிச் சுடுதல், நீர் விளையாட்டுகள், கராத்தே, கைப்பந்து, டேக்வாண்டோ, பனிச்சறுக்கு உள்ளிட்ட விளையாட்டுகளில் சாதனை படைத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பெண்களுக்கு 20 இடங்கள்: இந்த 101 பணியிடங்களில் 81 இடங்கள் ஆண்களுக்கும், 20 இடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கு மாற்றுத் திறனாளிகளும், முன்னாள் படைவீரர்களும் போட்டியிட முடியாது.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

கடைசி தேதி: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி நவம்பர் 14. மேலும் விவரங்களுக்கு www.recruitment.itbpolice.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

Also watch

First published: November 3, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...