ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்தோ- திபெத்திய எல்லை காவல்படையில் வேலை: கால்நடை பயிற்சி பெற்றவர்களுக்கு நல்ல வாய்ப்பு

இந்தோ- திபெத்திய எல்லை காவல்படையில் வேலை: கால்நடை பயிற்சி பெற்றவர்களுக்கு நல்ல வாய்ப்பு

இந்தோ- திபெத்திய காவல் படை

இந்தோ- திபெத்திய காவல் படை

ITBP HC Veterinary Dresser Recruitment Official Notification: விண்ணப்பங்கள் www.recruitment.itbpolice.nic.in-ல்  ஆன்லைன் முறை மூலம் மட்டுமே ஏற்கப்படும். ஆப்லைன் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டிரசர் வெடினரி (Dresser Veterinary) காலிப் பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை உள்துறை அமைச்சகத்தின் இந்தோ- திபெத்திய எல்லை காவல்படை வெளியிட்டுள்ளது.

  காலியிடங்கள்: 40

  சம்பளம்: ரூ.25500 81100 (7வது CPCப்படி) சம்பள கட்டமைப்பில் நிலை-4

  குருப் சி, அரசிதழ் பதிவுறா அலுவலர் பதவி (Non- Gazetted post). முதலில் தற்காலிகமாக நியமிக்கப்படும் பின்பு நிரந்தரம் செய்யப்படும்.  இந்த பதவிக்கு, இந்திய குடிமக்கள் (நேபாளம் மற்றும் பூடான் உள்பட)  விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  முக்கியமான நாட்கள்: ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை வரும் 19-ம் தேதி முதல் நவம்பர் 17-ம் தேதி வரை செயல்பாட்டில்  இருக்கும்

  கல்வித் தகுதி: 

  12ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்;

  கால்நடை தொடர்புடைய பாடநெறிகளில் (veterinary therapeutic or Livestok) பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். (Have passed regular Para Veterinary Course or Diploma or Certificate of minimum one year duration related to Veterinary Therapeutic or Livestock. Management for Government recognized Institute)

  வயது:  விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 17.11.2022 அன்று 25-க்கு கீழும், 18-க்கு மேலும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

  விண்ணப்பங்கள் www.recruitment.itbpolice.nic.in-ல்  ஆன்லைன் முறை மூலம் மட்டுமே ஏற்கப்படும். ஆப்லைன் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

  இதையும் வாசிக்க: 64 காலியிடங்கள் அறிவித்த டிஎன்பிஎஸ்சி.. ரூ.1 லட்சத்துக்கு மேல் சம்பளம்!

  தகுதி நிபந்தனைகள், ஆன்லைன் விண்ணப்ப படிவம் நிரப்புவதற்கான நடைமுறை, ஆள்சேர்ப்பு, நடைமுறை, தேர்வு மற்றும் சம்பளம் & அலவன்ஸ்கள் முதலியன பற்றிய விரிவான தகவலுக்கு ITBPP ஆள்சேர்ப்பு அறிவிப்பை பதிவிறக்கம் செய்து படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  தெரிவு முறை: உடல்திறன் தேர்வு (PET), உடல் தர தேர்வு (PST), எழுத்து தேர்வு, திறன் தேர்வு, ஆவணம் மற்றும் விரிவான மருத்துவ தேர்வு (DME) மதிப்புரை மருத்துவ தேர்வு (RME) அடங்கும்.

  Indo Tiber Border Police Force HEAD CONSTABLE POST (Dresser vetrinary)

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job vacancies, Recruitment