இந்தோ திபெத்திய எல்லைக் காவல்படை (Indo-Tibetan Border Police -ITBP) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த வேலைக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்திய குடிமகனாக இருத்தல் அவசியம். விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தபடலாம்.
வேலைக்கான விவரங்கள் :
வாரியத்தின் பெயர்
இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை (Indo-Tibetan Border Police)
பதவியின் பெயர்
கான்ஸ்டபிள்
காலியாக உள்ள வேலையின் எண்ணிக்கை
108 காலியிடம்
விண்ணப்பிக்க கடைசி தேதி
செப்டம்பர் 17ம் தேதி
சம்பள விவரம்
பதவிக்கான சம்பளம் மாதம் ரூ.21700/- முதல் ரூ.69100/-.
வயது விவரம்
குறைந்த பட்சம் 18 முதல் அதிக பட்சம் 23 வயது வரை விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
கல்வித் தகுதி
விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
PET, PST, written exam, Trade Test and DME/RME.
இந்தோ திபெத்திய எல்லைக் காவல்படை (Indo-Tibetan Border Police -ITBP) வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் www.recruitment.itbpolice.nic.in இல் ஆன்லைன் முறையில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ஆஃப்லைன் விண்ணப்பம் ஏற்கப்படாது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதள பக்கத்தில் உள்ள “Constable (Pioneer)” ஆட்சேர்ப்பு இணைப்பைக் கிளிக் செய்யவும்.
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆவணத்தை பதிவேற்றவும். பின்னர் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.