இந்தியன் ரயில்வேயின் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்-இல் பல்வேறு பிரிவில் தற்காலிக அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகவல் தொழில்நுட்ப பணியின் முழு விவரங்களைத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.
பணியின் விவரங்கள்:
பணியின் பெயர் | காலிப்பணியிடம் |
Network Expert | 2 |
Server Expert | 2 |
Storage Administrator | 2 |
Database Administrator | 2 |
Cyber Security Expert | 3 |
EMS/NMS Expert | 2 |
Cloud & VirtualizationExpert | 2 |
சம்பளம் :
இப்பணிகளுக்குச் சம்பளமாக ரூ.30,000 முதல் தொடங்கி ரூ.1,20,000/- வரை வழங்கப்படும்.
வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் அதிகபட்சம் 50 வயது வரை இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
தகவல் தொழில்நுட்ப துறையில் பணிக்கு ஏற்கத் தேவையான பிரிவில் B.E/B.Tech/MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் சான்றிதழ் படிப்புக்கள் எதிர்பார்க்கப்படுகிறது. சான்றிதழ் படிப்புக்கான விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : TNPSC | டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு செல்லும் முன் கவனிக்க வேண்டியவை...
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வும் தகுதியும் உள்ளவர்கள் https://www.railtelindia.com/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். மேலும் நேர்காணலுக்குச் செல்லும் போது அதனை எடுத்துச் செல்ல வேண்டும். விண்ணப்பதார்கள் அனைவரும் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://www.railtelindia.com
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: bpltooffice@railtelindia.com
நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் நாள்:
இடம் | நாள் |
Railtel Corporation of India LimitedO/o Territory Manager Bhopal,Plot no. 17, Raghunath Nagar near Shahpura thana,Bawadiyakalan, Bhopal (M.P). Pin- 462039 | 21.11.2022 & 22.11.2022 காலை 10.00 மணி |
மேலும் தகலவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.