ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரயில்வே ஐடி துறையில் காலியிடங்கள் : தகுதிக்கேற்ற பல்வேறு வேலைவாய்ப்பு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

ரயில்வே ஐடி துறையில் காலியிடங்கள் : தகுதிக்கேற்ற பல்வேறு வேலைவாய்ப்பு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

ரயில்வே தகவல் அமைப்பு மையம்

ரயில்வே தகவல் அமைப்பு மையம்

Central Govt Job alert : இந்தியன் ரயில்வேவில் ஐடி துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ரயில்வே அமைச்சகத்தில் கீழ் செயல்படும் ரயில்வே தகவல் அமைப்பு மையம் ரயில்வேயில் தகவல் தொழில்நுட்ப பணிகளை செய்து வருகின்றன. தற்போது இப்பணியிடத்திலிருந்து இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகவல்களை இங்குத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.

  பணியின் விவரங்கள்:

  பதவியின் பெயர்பணியிடம்
  Junior Electrical Engineer4
  Junior Civil Engineer1
  Executive Personnel / Administration /HRD9
  Executive, Finance and Accounts8
  Executive, Procurement2

  வயது வரம்பு :

  இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பாகக் குறைந்தபட்சம் 22 முதல் அதிகப்படியாக 28 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு மற்றும் OBC/PwBD பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உள்ளது.

  சம்பளம்:

  7வது CPC படி நிலை 6 விதியின் படி சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ரூ.48,852 + 38% சதவீதம் டிஏ வழங்கப்படும்.

  கல்வித்தகுதி:

  பதவியின் பெயர்தகுதி
  Junior Electrical EngineerElectrical Engineering பிரிவில் 3 ஆண்டுகள் டிப்ளமோ/ டிகிரி 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  Junior Civil EngineerCivil Engineering பிரிவில் 3 ஆண்டுகள் டிப்ளமோ / டிகிரி 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  Executive Personnel / Administration /HRDArts/Commerce/Science பிரிவில் பட்டப்படிப்பு மற்றும் முதுகலை டிப்ளமோ / MBA 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  Executive, Finance and AccountsCommerce பிரிவில் முதுகலைப் பட்டம் அல்லது ஏதாவது பிரிவில் 60% மதிப்பெண்களுடன் முதுகலை டிப்ளமோ.
  Executive, Procurementஇன்ஜீனியர் பிரிவில் 3 ஆண்டுகள் டிப்ளமோ தேர்ச்சி 60% மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும்.

  தேர்வு செய்யப்படும் முறை:

  இப்பணிகளுக்குக் கணினி வழி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also Read : பி.இ, பி.டெக் படித்தவர்களுக்கு ரூ.60,000 சம்பளத்தில் வேலை... மத்திய அரசின் செய்தித்தாள் பதிவு செய்யும் பிரிவில் காலி பணியிடங்கள்

  விண்ணப்பிக்கும் முறை:

  இப்பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் CSIR இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன்பு தேவையான சான்றிதழ் வைத்துக்கொண்டு விண்ணப்பியுங்கள். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1200/- ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ST/PwBD/Female/Transgender/Ex-Servicemen பிரிவினருக்கு ரூ.600/- ஆன்லைனில் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

  ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி : https://cdn.digialm.com//

  விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 20.12.2022.

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, IT JOBS