Home /News /employment /

எந்த தகுதியும் நிர்ணயிக்காமல், தேர்வு முறை இல்லாமல், தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்வது ஆபத்தானது.. உயர்நீதிமன்றம்

எந்த தகுதியும் நிர்ணயிக்காமல், தேர்வு முறை இல்லாமல், தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்வது ஆபத்தானது.. உயர்நீதிமன்றம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்திருந்தது.

    எந்த தகுதியும் நிர்ணயிக்காமல், தேர்வு முறை இல்லாமல், தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்வது ஆபத்தானது என உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக, பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்தது.

    இவ்வாறு, நிரப்படும் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேவி கல்வி பணிபுரியும் தகுதிவாய்ந்த தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனிடையே, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை , தற்காலிகமாக நிரப்புவதற்கு அனுமதி அளித்து 23.06.2022 தேதி பள்ளி கல்வித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீதான விசாரணையில் எந்த தகுதியும் நிர்ணயிக்காமல், தேர்வு முறை இல்லாமல், தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்வது ஆபத்தானது என உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    மேலும், இது குறித்து தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Govt School, School Teacher, Tn schools

    அடுத்த செய்தி