ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ஐடி தொழில்துறை சரிவை சந்திக்கக் கூடும் - எச்சரிக்கும் டிசிஎஸ் நிறுவன CEO சுப்பிரமணியன்!

ஐடி தொழில்துறை சரிவை சந்திக்கக் கூடும் - எச்சரிக்கும் டிசிஎஸ் நிறுவன CEO சுப்பிரமணியன்!

CEO சுப்பிரமணியன்

CEO சுப்பிரமணியன்

குறிப்பாக, ஐடி துறை நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் மீது சுமையை சுமத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாட்டில் உள்ள மற்ற தொழில்களைப் போல அல்லாமல், உலக பொருளாதார மாற்றங்களுக்கும், ஐடி துறைக்கும் நேரடி தொடர்பு உண்டு. உலகின் ஏதோ ஒரு மூளையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால், அதன் எதிரொலியாக ஐடி துறையில் சிலருக்கு வேலை பறிபோகக் கூடும்.

அந்த வகையில் தற்போது ஐரோப்பாவில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு, அமெரிக்காவில் நிலவும் பணவீக்கம் போன்ற காரணங்களால் ஐடி துறை நெருக்கடியை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், எதிர்வரக் கூடிய எந்தவொரு நெருக்கடியும் தங்களை பாதிக்காது என்ற வகையில் 8 பில்லியன் டாலருக்கான வர்த்தகத்தை நோக்கி டிசிஎஸ் நிறுவனம் பயணித்து வருகிறது.

ஆனால், ஐடி ஊழியர்களிடையே தற்போது நியாயமற்ற கலாச்சாரம் ஒன்று பரவி வருகிறது. அதாவது, ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் அதே சமயத்தில், மற்றொரு நிறுவனத்திற்காகவும் நிழல் போல பணியாற்றத் தொடங்கியுள்ளனர். இந்தப் போக்கு காரணமாக ஐடி துறையானது சரிவைச் சந்திக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கிறார் டிசிஎஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி என். கணபதி சுப்பிரமணியன். எகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Read More : ஈசியா கிடைக்கும் அரசு வேலை.. டிஎன்பிஎஸ்சி தேர்வில் எளிமையா பாஸ் இப்படி ஒரு வழி இருக்கு!

எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை ஐரோப்பா மேற்கொண்டு வருகிறது. தங்களிடம் உள்ள மூல ஆதாரங்களைக் கொண்டு அதற்கு தீர்வு கண்டு வருகின்றனர். பிரான்ஸ் நாட்டில் சொந்த அணு ஆற்றலை கொண்டு நிலைமையை சமாளித்து வருகின்றனர்.

ஆனால் அமெரிக்காவின் பணவீக்கம் முக்கிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பொருளாதார காரணிகள் கவலைக்குரியதாக இருந்தாலும், மக்கள் தொடர்ந்து செலவுகளை செய்து வருகின்றனர். குறிப்பாக, ஐடி துறை நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் மீது சுமையை சுமத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளன.ஏற்கனவே செய்து வரும் ப்ராஜக்டுகளுக்கான முதலீட்டை எந்த வகையிலும் குறைத்துக் கொள்ளும் எண்ணம் இல்லை என்று கிளையண்ஸ் கூறி வருகின்றனர்.

சுமார் 3 முதல் 6 மாத கால அளவு கொண்ட குறுகிய கால புராஜக்டுகளில் கொஞ்சம் லாபம் கிடைக்கக் கூடும் என்றும், வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முடியும் என்றும் ஐடி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

புதிய பணியாளர்களுக்கான ஊதியம் அதிகரிக்கப்படுமா:ஐடி துறைக்குள் நுழையும் புதிய பணியாளர்களுக்கான ஊதியம் அதிகரிக்கப்படுமா என்ற கேள்விக்கு சுப்பிரமணியன் பதில் அளிக்கையில், “சில அடிப்படையான திறன்களுடன் பணியாளர்கள் உள்ளே வருகின்றனர். அடுத்த 18 மாதங்களில் சரியான பயிற்சி மற்றும் அர்த்தமுள்ள அனுபவம் காரணமாக அவர்களது ஊதியம் இரண்டு மடங்கு உயர்ந்து விடுகிறது. அந்த வகையில் தான் இந்த தொழில்துறை கட்டமைக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவில் வாழ்க்கை தரத்திற்கு ஏற்ப டிசிஎஸ் நிறுவனம் ஊதியம் வழங்கி வருகிறது’’ என்று பதில் அளித்தார்.
நிழல் பணி முறையால் பாதிப்பு ஏற்படுமா: ஒரு ஊழியர் நிழல் முறையில் பணி செய்வது நியாயமற்றது மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது. நிறுவனங்கள் மற்றும் கிளையண்ட்ஸ் தரப்பில் இதை சகித்து கொள்ள முடியாது. இதே நிலை நீடித்தால் ஐடி தொழில்துறை சரிவை சந்திக்கக் கூடும் என்றார் சுப்பிரமணியன்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Employment, IT JOBS