ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ISRO Recruitment : இஸ்ரோவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு..! உடனே விண்ணப்பியுங்கள்

ISRO Recruitment : இஸ்ரோவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு..! உடனே விண்ணப்பியுங்கள்

இஸ்ரோ

இஸ்ரோ

ISRO Recruitment : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் எலக்ரானிக்,மெக்கானிகல் மற்றும் கணினி அறிவியல் பிரிவில் பொறியியல் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகள் கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியில் பெயர்பணியிடம்
Scientist/Engineer‘SC’ (Electronics)21
Scientist/Engineer ‘SC’(Mechanical)33
Scientist/Engineer ‘SC’(Computer Science)14

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 28 ஆக உள்ளது.

சம்பளம்:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் Scientist/Engineer‘SC’ பிரிவில் பணியாற்ற ரூ.56,100/- மாத சம்பளமாக வழங்கப்படும். மேலும் இதர செலவுகளுக்குத் தனியே வழங்கப்படும்.

கல்வித்தகுதி மற்றும் கேட் தகுதி:

Scientist/Engineer‘SC’ (Electronics) பணிக்கு Electronics & Communication பாடத்தில் BE/ B.Tech அல்லது அதற்கு நிகரான டிகிரியில் 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Electronics & Communication பாடத்தில் 2021/2022 கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Scientist/Engineer ‘SC’(Mechanical) பணிக்கு Mechanical Engineering பாடத்தில் BE/ B.Tech அல்லது அதற்கு நிகரான டிகிரியில் 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Mechanical Engineering பாடத்தில் 2021/2022 கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Scientist/Engineer ‘SC’(Computer Science) பணிக்கு Computer Science Engineering பாடத்தில் BE/ B.Tech அல்லது அதற்கு நிகரான டிகிரியில் 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.Computer Science Engineering பாடத்தில் 2021/2022 கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்குத் தகுதியானவர்களைக் கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்காணல்/எழுத்துத் தேர்வுக்கு அழைப்பர். அதில் பெரும் மதிப்பெண்கள் மற்றும் கேட் தகுதி அடிப்படியில் பணி நியமனம் செய்யப்படும்.

Also Read : கேந்திரிய வித்யாலயாவில் 13,404 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள்.. ரூ.2,09,200/- வரை சம்பளம்.. உடனே விண்ணப்பியுங்கள்..

விண்ணப்பிக்கும் முறை:

இஸ்ரோவில் இணையத்தளத்தில் இப்பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பக்கட்டணமாக ரூ.250/- ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://www.isro.gov.in/

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 19.12.2022

மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Central Government Jobs, ISRO, Jobs