இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் (Indian Space Research Organisation - ISRO) கீழ் இயங்கும் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (National Remote Sensing Centre - NRSC) ஆனது ஜேஆர்எஃப், ஆர்ஏ மற்றும் ரிசர்ச் சயின்டிஸ்ட் பதவிகளுக்கான காலி இடங்களை நிரப்பும் நோக்கத்தின் கீழ் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்க தொடங்கியுள்ளது.
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் என்ஆர்எஸ்சி-இன் (NRSC) அதிகாரப்பூர்வ தளமான nrsc.gov.in மூலம் ஆன்லைனில் வழியாக விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையின் கீழ் மொத்தம் 55 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க 2022ம் ஆண்டு மே 8ம் தேதி தான் கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ வேலை வாய்ப்பு 2022: தேர்வு செயல்முறை
இஸ்ரோ அறிவித்துள்ள என்.ஆர்.எஸ்.சி காலி பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்வதற்காக முதலில் கணினி அடிப்படையிலான தேர்வை (Computer Based Test - CBT) நடத்தப்படும். அந்த தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் 'ஸ்க்ரீனிங்' செய்யப்பட்டு, அதை தொடர்ந்து நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அழைக்கப்படுவார்கள். அதில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் என்ஆர்எஸ்சி இறுதித் தேர்வை நடத்தும்.
இஸ்ரோ வேலை வாய்ப்பு 2022: காலியிட விவரங்கள் :
ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ (Junior Research Fellow) | 12 பதவிகள் |
ரிசர்ச் சைன்டிஸ்ட் (Research Scientist) | 41 பதவிகள் |
ரிசர்ச் அசோசியேட் (Research Associate) | 2 பதவிகள் |
மேற்கண்ட பதவிகளுக்கான கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு
ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ:
கல்வி: ரிமோட்சென்சிங் / ஜிஐஎஸ் / ரிமோட் சென்சிங் & ஜிஐஎஸ் / ஜியோ இன்ஃபர்மேட்டிக்ஸ் / ஜியோமேட்டிக்ஸ் / ஜியோஸ்பேஷியல் டெக்னாலஜி / ஸ்பேஷியல் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகியவற்றில் எம்இ / எம்.டெக் உடன் பி.இ / பி.டெக் சிவில் இன்ஜினியரிங் (அல்லது) எம்எஸ்சி அக்ரிகல்ச்சர்.
வயது: யூஆர் /இடபுள்யூஎஸ் விண்ணப்பதாரர்களுக்கு - 28 வயது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - 31 வயது, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு - 33 வயது.
ALSO READ | TNPSC: குரூப் 4 தேர்வுக்கு 21.83 லட்சம் பேர் விண்ணப்பிப்பு... 1 இடத்துக்கு 300 பேர் போட்டி
ரிசர்ச் சைன்டிஸ்ட்:
கல்வி: ரிமோட் சென்சிங் / ஜிஐஎஸ் / ரிமோட் சென்சிங் & ஜிஐஎஸ் / ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ் / ஜியோமேடிக்ஸ் / ஜியோஸ்பேஷியல் டெக்னாலஜி / ஸ்பேஷியல் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகியவற்றில் எம்இ / எம்.டெக்.
வயது: யூஆர் /இடபுள்யூஎஸ் விண்ணப்பதாரர்களுக்கு - 35 வயது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - 38 வயது, எஸ்சி /எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு - 40 வயது.
ரிசர்ச் அசோசியேட்
கல்வி: தாவரவியல்/ சூழலியல்/ வனவியல்/ சுற்றுச்சூழல் அறிவியல்/ வனவிலங்கு உயிரியல் ஆகியவற்றில் பிஎச்டி பட்டம் மற்றும் தொடர்புடைய பாடங்களில் எம்எஸ்சி & பிஎஸ்சி.
வயது: யூஆர் /இடபுள்யூஎஸ் விண்ணப்பதாரர்களுக்கு - 35 வயது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - 38 வயது, எஸ்சி/எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு - 40 வயது.
மேற்கண்ட பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பதவிகளுக்கு மே 8, 2022க்கு முன் அதிகாரப்பூர்வ இணையதளமான nrsc.gov.in வழியாக விண்ணப்பிக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ISRO, Job Vacancy